நேத்து நடந்த உண்மை தெரியுமா?கம்பீரை திட்டுறது பலருக்கு பொழுது போக்கு ஆயிடுச்சி – இர்பான் பதான் விளக்கம்

0
0

​நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை விமர்சித்தவர்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பத்தான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

​நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமான வெற்றியைப் பதிவு செய்து தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் செய்யப்பட்ட சில வியூக மாற்றங்கள் மற்றும் பேட்டிங் ஆர்டர் மாற்றங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டன.

- Advertisement -

​குறிப்பாக, வழக்கமாக களமிறங்கும் வீரர்களின் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி பலரும் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த சூழலில், அந்தப் போட்டியின் போது வீரருக்கு ஏற்பட்ட காயம் காரணமாகவே பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டது என்பது பின்னர் தெரியவந்தது.

​இதனைத் தொடர்ந்து முன்னாள் வீரர் இர்பான் பத்தான் இந்த விவகாரம் குறித்துப் பேசுகையில், “இஷான் கிஷன் முதல் டி20 போட்டியின் போது சிறிய அளவிலான காயம் காரணமாகவே வழக்கமான இடத்தை விட்டு கீழே இறங்கி பேட்டிங் செய்தார். ஆனால், பேட்டிங் வரிசையை மாற்றியதற்காக அனைவரும் உடனடியாக கவுதம் கம்பீரை விமர்சிக்கத் தொடங்கினர். அவரை விமர்சிப்பது என்பது இக்காலகட்டத்தில் அனைவரின் விருப்பமான பொழுதுபோப்பாக மாறிவிட்டது” என்று கூறி இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

​மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், “தயவுசெய்து எந்தவொரு தீர்ப்பையும் வழங்குவதற்கு முன்பாக சற்று காத்திருங்கள். முழுமையான கதை என்னவென்று தெரியாமல் அவசரமாக எதையும் முடிவு செய்யாதீர்கள். இது வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும். சமூக வலைதளங்களில் வியூஸ் மற்றும் நம்பர்ஸ் பெறுவதற்கான அவசரத்தில், முழு உண்மையும் தெரியாமல் நீங்கள் ஒருவரை புண்படுத்திவிடக்கூடும். எதையும் விமர்சிப்பதற்கு முன்பு சிந்தித்துப் பாருங்கள்” என்று கூறி இருக்கிறார் என முடித்துள்ளார்.

- Advertisement -