என் காலத்தில் விராட் கோலிதான் முழுமையான பேட்ஸ்மேன் – ஆஸ்திரேலியா ஜாம்பவான் வீரர் அதிரடியான புகழ்ச்சி கட்டுரை!

0
2772
Viratkohli

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் விராட் கோலி பேட் செய்த விதம், கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி கிரிக்கெட் முன்னாள் வீரர்களையும் மிகவும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது!

இந்த ஆட்டத்தை ஐசிசி மிகச் சிறந்த ஐந்து டி20 உலகக் கோப்பை ஆட்டங்களில் ஒன்றாகத் தேர்வு இருக்கிறது. இந்த ஆட்டத்தை இந்த இடத்திற்கு கொண்டு சென்றவர் யார் என்றால் அது விராட் கோலிதான்.

- Advertisement -

கடைசி 8 பந்துகளில் 28 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹாரிஸ் வீசிய 19 வது ஓவரின் ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்தை விராட் கோலி சிக்ஸர் அடித்த விதம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

குறிப்பாக அவர் 19ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் சராசரியான நீளத்தில் வந்து விழுந்த பந்தை பின் காலின் பலம் கொண்டு நேராக தூக்கி அடித்து சிக்ஸராக மாற்றியது யாராலும் நம்ப முடியாத ஒன்றாகத்தான் கண்கள் விரிய அந்த நேரத்தில் பார்த்தார்கள் என்று கூறலாம். அந்த ஆட்டத்தில் விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார் என்பது நாம் அறிந்த செய்தியே!

தற்பொழுது விராட் கோலியின் இந்த ஆட்டத்தை வைத்து கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் வீரரான ஆஸ்திரேலியா கிரேக் சாப்பல் ஒரு சிறப்பு கட்டுரையை எழுதி இருக்கிறார். அதில் விராட் கோலியின் ஆட்டத்தையும் விராட் கோலியையும் அவர் புகழ்ந்துள்ள விதம் அவ்வளவு சிறப்பாக இருக்கிறது.

- Advertisement -

இது பற்றி கிரேக் சாப்பல் கூறும் பொழுது ” விராட் கோலி எனது காலத்தின் மிகவும் முழுமையான ஒரு இந்திய பேட்ஸ்மேன். சாம்பியன்களில் சில வீரர்களுக்கு மட்டுமே தங்களின் கற்பனையை வேறொரு கட்டத்திற்கு எடுத்துச் சென்று சிறப்பாக செயல்படுத்த முடியும் புத்திசாலித்தனம் இருக்கிறது. விராட் கோலிக்கு அது உண்டு. ஒருவேளை இந்திய பேட்ஸ்மேன் டைகர் பட்டோடிக்கு இந்த திறமை இருந்திருக்கலாம் ” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் எழுதியுள்ளதிலிருந்து
” விராட் கோலி டி 20 கிரிக்கெட்டில் இதுவரை அறியப்படாத கடவுளின் பாடலுக்கு இணையான ஒரு இன்னிங்ஸை விளையாடினார். ஒரு பூனை புதிய கம்பளியோடு விளையாடுவதைப் போல விராட் கோலி ஆரம்பத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சை கிண்டல் செய்தார். நான் ஒரு நிலைக்கு வரும் வரை சிறந்த பாகிஸ்தான் பந்துவீச்சை தவிர்த்தார். பிறகு அவர் மெல்போன் கிரிக்கெட் மைதானத்தின் பச்சைக்கம்பளத்தின் மீது தனது அற்புத விளையாட்டை அம்பலப்படுத்தினார் ” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

அவரது எழுத்தில் மேலும் ” நவீன கிரிக்கெட்டில் பல சிறந்த ஹிட்டர்களை என்னால் நினைத்துப் பார்க்க முடியும். அவர்கள் இதே போல வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி போல அதை யாரும் தூய பேட்டிங் மூலமாக செய்யவில்லை” என்று கூறினார்!