வீடியோ: விராட் கோலி பிடிக்க தடுமாறிய கேட்சை.. சிறப்பாக செய்து முடித்த ரிஷப் பண்ட்!

0
711

விராட் கோலி பிடிக்க தடுமாறிய கேட்சை சிறப்பாக பிடித்து இருக்கிறார் ரிஷப் பண்ட்.

வங்கதேசம் மற்றும் இந்தியா அணிகள் மோதி வரும் டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 254 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணிக்கு கில் மற்றும் புஜாரா இருவரும் சதம் அடிக்க, இந்திய அணி 258 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்தியா 512 ரன்கள் முன்னிலையில் இருந்தது. வங்கதேசம் அணிக்கு 513 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பேட்டிங் செய்து வந்த வங்கதேசம் அணி மூன்றாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் அடித்திருந்ததும் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த வங்கதேசம் அணியின் துவக்க வீரர்கள் விக்கெட் இழக்காமல் இந்திய பவுலர்களுக்கு சவாலாக விளங்கினர். முதல் விக்கெட்டை வீழ்த்த இந்திய அணி மிகவும் திணறி வந்தது. 5 பவுலர்களை முழுமையாக பயன்படுத்தியும் எந்தவித பயனும் இல்லாமல் இருந்தது.

துவக்க வீரர் சான்டோ 67 ரன்கள் அடித்திருந்தபோது, உமேஷ் யாதவ் பந்தில் அடிக்க முயற்சித்தார். அது கீப்பர் திசையில் சென்றது. சற்று விலகிச் சென்றதால் முதலில் விராட் கோலி அதை பிடிக்க முற்பட்டார். ஆனால் தயக்கத்தினால் விட்டுவிட்டார். எதையும் பொருட்படுத்தாமல் லாவகமாக பாய்ந்த ரிஷப் பண்ட், அதை பிடித்து இந்திய அணிக்கு முதல் விக்கெட்டாக மாற்றினார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி இருவரின் வீடியோ காட்சி தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இங்கே நாமும் அதை காண்போம்.

வீடியோ:

- Advertisement -