பும்ராவின் 15 பந்து.. 4 முறை அவுட் ஆன விராட் கோலி.. ஜடேஜாவிடமும் பரிதாபம்.. களத்தில் என்ன நடந்தது?

0
132
Bumrah

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியின் தடுமாற்றம் பயிற்சிகளும் தொடர்ந்து வருகிறது. பும்ராவிடம் விராட் கோலி பயிற்சியில் தொடர்ந்து ஆட்டமிழந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை உத்தர பிரதேஷ் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் துவங்குகிறது. இந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பயிற்சியில் இந்திய அணி மும்முரமாக இறங்கி இருக்கிறது. இதில் விராட் கோலி தடுமாற்றம் அதிகமாகவே தெரிவதாக செய்திகள் கூறுகிறது.

- Advertisement -

முதல் டெஸ்ட் பரிதாபம்

இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் தந்தார். அவருடைய பேட்டிங் டச்சிறப்பாக இருந்த முழுதும் கூட அவர் திடீரென ஆட்டம் இழப்பது கவலையாக இருக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டில் பந்து பட்டதை கூட உணர முடியாமல் ரிவ்யூ செய்யாமல் பரிதாபமாக ஆட்டம் இழந்து வெளியேறினார். தற்போது மழை பயிற்சியிலும் அவருடைய தடுமாற்றம் தொடர்ந்து வருவது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அணி நிர்வாகத்துக்கும் கவலை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

பும்ரா வீசிய 15 பந்து

நேற்று வலை பயிற்சியில் விராட் கோலி பும்ராவை முதலில் சந்தித்திருக்கிறார். இதில் பும்ரா வீசிய முதல் 15 பந்துகளில் விராட் கோலி நான்கு முறை ஆட்டம் நடந்திருக்கிறார். இதன் காரணமாக விராட் கோலி மிகவும் விரக்தி அடைந்து காணப்பட்டார் என்று கூறப்படுகிறது.

மேலும் வேகப் பந்துவீச்சை சந்திக்க விரும்பாமல் அங்கிருந்து அஸ்வின் மற்றும் ஜடேஜா பந்து வீசிக் கொண்டிருந்த வலைக்கு சென்று பேட்டிங் செய்திருக்கிறார். ஆனால் அங்கும் ஜடேஜா பந்துவீச்சை அடிக்க முயன்று மூன்று முறை பந்தை தவறவிட்டிருக்கிறார். மேலும் ஒரு முறை ஆட்டமும் இழந்திருக்கிறார்.

இதையும் படிங்க : விராட் ரோகித் செய்வது.. இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது கிடையாது.. கவனமா இருங்க – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் எச்சரிக்கை

பயிற்சியில் விராட் கோலியின் இந்த தடுமாற்றம் உண்மையில் கவலை அளிக்க கூடிய ஒன்றாகவே மாறி இருக்கிறது. இதன் காரணமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் கட்டாயம் விளையாடியிருக்க வேண்டும் என்கின்ற விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.

- Advertisement -