உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் நாளை நடைபெற இருக்கிறது . உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் நாளை பங்கேற்க இருக்கின்றன .
உலக டெஸ்ட் கேம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது இறுதிப் போட்டி நாளை நடைபெற இருக்கிறது . 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணி இடம் தோல்வி அடைந்தது . அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2021-23 பெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தி இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக தொகுதி பெற்றிருக்கிறது .
ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை 2019-21 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்து இறுதிப் போட்டிக்கு தகுதி வரும் வாய்ப்பை இழந்தது . இதன் காரணமாக இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பழி தீர்க்கும் எண்ணத்தில் இருக்கும் .
ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சு முழு பலத்துடன் இருக்கிறது . பேட்டிங்கிலும் ஸ்டீவன் ஸ்மித் மார்னஸ் லபுசேன் உஸ்மான் கவாஜா போன்ற வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். இதன் காரணமாக இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது . மேலும் பந்து வீட்டில் மிச்சல் ஸ்டார்க் பேட் கம்மின்ஸ் ஸ்காட் போலான்ட் போன்ற திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார்கள் .
கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவரும் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக தனது அணி வீரர்களை எச்சரித்திருக்கிறார் . இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியிருக்கும் அவர்” பொதுவான இடத்தில் வைத்து நடைபெறும் ஒரு போட்டியின் போது மைதானத்தின் தன்மைகளுக்கு ஏற்ப யார் தங்களை தகவமைத்துக் கொண்டு விளையாடுகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற முடியும் என தெரிவித்துள்ளார் . மேலும் பேட்டிங்கிற்கு சாதகமான தட்டையான ஆடுகளங்கள் தான் கிடைக்கும் என இந்திய அணி எதிர்பார்க்கக் கூடாது . எந்த மாதிரியான சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்” என தெரிவித்திருக்கிறார் விராட் கோலி .
இது பற்றி மேலும் பேசி இருக்கும் அவர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியின் அழகே இதுதான் எனவும் தெரிவித்துள்ளார் . இரண்டு அணிகளும் தங்களுக்கு சாதகமில்லாத பொதுவான ஒரு இடத்தில் ஆடி தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவது தான் இந்த தொடரின் அழகு எனவும் அவர் கூறியிருக்கிறார் . மைதானத்தின் தன்மைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு அந்த சூழ்நிலைகளோடு ஒன்றி விளையாடும் அணிதான் வெற்றி பெற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
எனவே பேட்டிங்கிற்கு சாதகமான ஸ்விங் இல்லாத ஆடுகளம் அமைக்கப்படும் என எந்த ஒரு நேரத்திலும் நினைக்கக் கூடாது. எந்த ஒரு ஆடுகளும் அமைத்தாலும் அதன் தன்மைகளுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொண்டு விளையாட வேண்டும் அப்போதுதான் வெற்றி பெற முடியும் எனவும் தெரிவித்திருக்கிறார் கிங் கோலி. ஆஸ்திரேலியா போன்ற ஒரு பலமான அணிக்கு சிறிய இடம் கொடுத்தாலும் அதை வைத்து போட்டியில் ஆதிக்கம் செலுத்த துவங்கி விடுவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.