மனதை மாற்றிக் கொண்ட விராட் கோலி.. 15 வருடங்களுக்கு பிறகு அரிய சம்பவம்.. பெங்களூரில் புது வரலாறு

0
63
Virat

தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் ஒரு முக்கிய பிரச்சினைகள் முரண்பட்டு வந்த விராட் கோலி மனதை மாற்றிக் கொண்டு விட்டார் என அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகி இருக்கிறது.

தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த இந்திய அணிகள் இடம்பெற்றுள்ள விராட் கோலி முதல் போட்டியில் 120 பந்துகளில் 135 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.

- Advertisement -

தேர்வுக்குழு தரும் தலைவலி

ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரிலும் தற்போது தென் ஆப்பிரிக்க ஒரு நாள் தொடரிலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பாக இருந்தாலும் கூட, அவர்கள் இருவரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் கமிட் ஆகவில்லை என அஜித் அகர்கர் தெரிவித்திருந்தது ரசிகர்களுக்கு வருத்தத்தை உண்டாக்கி இருக்கிறது.

இந்தியத் தேர்வுக்குழு இருவரையும் உள்நாட்டு கிரிக்கெட் விளையாட வற்புறுத்துவதாகவும், இதை ரோகித் சர்மா ஏற்றுக் கொண்டாலும் விராட் கோலி ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறப்பட்டது. குறிப்பாக விராட் கோலி லண்டனில் தனிப்பட்ட பயிற்சி செய்ய தயாராக இருப்பதாகவும், இந்தியா வந்து உள்நாட்டு கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

மனதை மாற்றிக் கொண்ட விராட் கோலி

இந்த நிலையில் விராட் கோலி இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உள்நாட்டுத் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வருகிறது. மேலும் இதற்கு முன்பு 2010 ஆம் ஆண்டு இந்தத் தொடரில் டெல்லி அணிக்காக சர்வீசஸ் அணிக்கு எதிராக விளையாட்டு இருந்தால். தற்போது 15 ஆண்டுகள் கழித்து இந்த தொடரில் மீண்டும் டெல்லி அணிக்காக விளையாட இருக்கிறார்.

இதையும் படிங்க: எம்எஸ் தோனி கண்டிப்பா இப்போ வருத்தத்துல இருப்பார்.. 99 சதவீதம் சிஎஸ்கே அவருக்கு பிளான் பண்ணுச்சு – இந்திய முன்னாள் வீரர்

இந்தத் தொடரில் வருகின்ற டிசம்பர் 24 ஆந்திரா அணிக்கு எதிராகவும் டிசம்பர் 26 குஜராத் அணிக்கு எதிராகவும் டெல்லி அணிக்காக விளையாட இருக்கிறார். மேலும் இந்த இரண்டு போட்டிகளுமே பெங்களூரு மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கர்நாடக ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

- Advertisement -