ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டில் மூன்று வாடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் ரன் மெசின் விராட்கோலியின் பேட்டிங் பார்ம் தற்போது சரிந்திருக்கிளது. அவர் ஆட்டமிழக்கும் பந்துகள் கூட அவ்வளவு கடினமாக இல்லை. 2019 நவம்பர் மாதத்தோடு அவர் பேட் சதம் காண்பதை நிறுத்திக் கொண்டுள்ளது!
இந்த வருட ஐ.பி.எல் தொடரில் மூன்று கோல்டன் டக் வாங்கி மிகவும் தடுமாறிய வீராட் கோலிக்கு, அடுத்து இந்தியாவில் தென் ஆப்பிரிக்கா விளையாடிய ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த ஓய்வு அவரை மீண்டும் பார்ம்க்கு கொண்டு வர உதவும் என்று அனைவருமே எதிர்பார்த்தனர்.
ஓய்வுக்குப் பிறகு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம் பெற்ற விராட் கோலி, முதலில் ஒரு டெஸ்டில் இரு இன்னிங்ஸில் 11, 20, இரண்டு டி20 போட்டிகளில் 1, 11, இரண்டு ஒருநாள் போட்டிகளில் 16, 17 என ஆறுமுறை மீண்டும் தடுமாறினார். அவர் ஆட்டமிழந்த பந்துகள் பெரும்பாலும், அவரது விக்கெட்டை எடுக்கும் அளவிற்கான மிகச்சிறந்த பந்துகள் கிடையாது என்பதுதான் கவலையான விசயம்.
இதையடுத்து இங்கிலாந்தில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட இந்திய அணி அங்கிருந்து வெஸ்ட் இன்டீஸ் சென்றுள்ளது. அங்கு மூன்று ஒருநாள், ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் முழுமைக்குமாக மீண்டும் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து புத்துணர்ச்சியாக ஆகஸ்ட் இறுதியில் தொடங்கும் ஆசியக் கோப்பை தொடருக்கு விராட் கோலி திரும்புவார் என்று கணிக்கப்பட்டது. இதற்கு நடுவில் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஜிம்ப்பாப்வே சென்று இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது.
தற்போது ஆசியக் கோப்பைக்கு முன்பாக விராட் கோலி இந்த ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இடம்பெறுவார் என்று தெரிகிறது. இதுக்குறித்து இந்திய தேர்வுகுழு தெரிவிக்கையில் “இந்த இடைவேளை அவரை புத்துணர்ச்சியோ மீண்டும் சிறப்பான முறையில் விளையாட வைக்கும் என்று நம்புகிறோம். ஆனால் நடுவில் எந்த கிரிக்கெட் போட்டியும் இல்லாமல் கடினமாக இருக்கும். அதனால்தான் அவர் ஜிம்பாவேக்கு எதிராக விளையாட வேண்டுமென்று விரும்புகிறோம். இது அவரது விருப்பமான கிரிக்கெட் வடிவம் மற்றும் இது அவர் பார்ம்க்கு வர உதவும். தேர்வுக்கு அருகில் இறுதி முடிவை எடுப்போம்” என்று கூறியிருக்கிறது.
விராட் கோலி முதன் முதலில் வெளியில் சென்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடியது ஜிம்பாப்வே உடன்தான். 2015ஆம் ஆண்டு ஜிம்பாப்வே சென்று விளையாடினார். மேலும் விராட் கோலி ஜிம்பாப்வேற்கு எதிராக விளையாடி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது!