விராட் கோலி தன் திருமண வாழ்வு, குழந்தை ஆகியவற்றை மறந்து இதைச் செய்தாக வேண்டும் – கோலி மீண்டு வருவதற்கான வழியைக் குறிப்பிட்டுள்ள மைக்கல் வாகன்

0
70
Michael Vaughan about Virat Kohli

தற்போதைய ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனில் எந்தெந்த அணிகள் ப்ளே-ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைந்து இருக்கிறது? எந்தெந்த அணிகள் ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பிலிருந்து வெளியேறி இருக்கின்றன? எந்ததெந்த பழைய இந்திய வீரர்கள் பார்ம்க்கு திரும்பி இருக்கிறார்கள்? எத்தனை இந்திய இளம் திறமைகள் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள்? கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி எது? என்று இதையெல்லாம் தாண்டி, கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப்பெரிய பேசு பொருளாய் இருப்பது விராட்கோலியின் பேட்டிங் பார்ம்தான். ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பிலிருந்து வெளியேறி இருக்கும் மும்பை அணியின் கேப்டன், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் பார்மும் மோசமாய் இருந்தாலும், ப்ளேஆப்ஸ் வாய்ப்பில் இருக்கின்ற, கேப்டன் பொறுப்பில் இல்லாத விராட்கோலியின் பேட்டிங் பார்ம்தான் இந்திய கிரிக்கெட் வாரியம் வரை விவாத விசயமாய் நிற்கிறது!

இந்திய அணிக்காக எத்தனையோ ஆட்டங்களை தனியொரு வீரராய் நின்று, எதிரணிகளிடமிருந்து தட்டிப் பறிறித்துக்கொண்டு வந்து தந்த வெற்றிக்கரமான இந்திய பேட்ஸ்மேன்களில் முதலிடம் விராட்கோலிக்குத்தான் இருக்கிறது. இலக்கை துரத்தும் போது அவர் ஆடும் ஆட்டம், எதிரணிகளிடமிருந்து தேவைக்கு அவர்களின் பாக்கெட்டில் இருந்து ரன்களை எடுத்துக்கொள்வதைப் போல இருக்கும். ரன் மிஷின் என்ற பட்டத்திற்குப் பொருத்தமான வீரர்தான் விராட்கோலி. இன்று சில சிறிய பிரச்சினைகளால் இந்த ரன் மெசின் பழுதாகி இருக்கிறது.

- Advertisement -

ஒரு ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்னாக 973 ரன்களை 81 சராசரியில், 2016ஆம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் குவித்தவர் விராட்கோலி. இதில் நான்கு சதங்களும் அடங்கும். இதுவரை இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் நெருங்கியவர்கள் யாரும் கிடையாது. ஆனால் நடப்பு ஐ.பி.எல் தொடரில் 13 ஆட்டங்களில் விராட்கோலி அடித்திருப்பது 236 ரன்கள். சராசரியோ இருபதுக்கும் கீழே 19.167. ஐ.பி.எல் அறிமுகமான 2008 சீசனில்தான் விராட்கோலியின் பேட்டிங் சராசரி இருபதுக்கும் கீழ் இருந்திருக்கிறது. அதற்குப் பிறகு உச்சத்தில் நின்ற அவரது பேட்டிங் சராசரி பதினான்கு ஆண்டுகள் கழித்து, இருபதுக்கும் கீழ் சரிந்திருக்கிறது!

விராட்கோலியின் பேட்டிங் சரிவுக்குத் தீர்வு சொல்லியிருக்கும், ஆஷஸ் தொடரை வென்ற இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், அதில் “விராட்கோலி தனது பழைய சாதனைகளை எல்லாம் மறந்துவிட்டு, மீண்டும் இளமை உணர்வோடு, அவரது பாணியில் விளையாட வேண்டும். பெங்களூர் அணி கேப்டன் பாஃப் டூ பிளிசிஸ் விராட்கோலியிடம், உங்களுக்கு திருமணம் ஆகவில்லை, குழந்தை இல்லை, பழைய பேட்டிங் சாதனைகளை எல்லாம் மறந்து விட்டு, ஒரு புது வீரராக விளையாடுங்கள், என்று கூறியிருப்பார் என்று நம்புகிறேன். விராட்கோலி இதனைச் செய்யும் போது, வலிமையாக நிச்சயம் திரும்பி வருவார்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்!