“விராட் கோலி மீண்டும் கேப்டனாக வரவேண்டும்” – முன்னாள் தேர்வு குழு தலைவர் பரபரப்பு பேட்டி!

0
494

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று இருக்கிறது. அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளைக் கொண்ட தொடர்களில் ஆட இருக்கிறது.

நாளை மறுநாள் தொடங்க இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த ஜூலை இரண்டாம் தேதி வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டு சென்றது.2023-2025 ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் இந்த டெஸ்ட் தொடர இடம் பெற்றுள்ளதால் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக இது கருதப்படுகிறது .

- Advertisement -

சமீப காலமாகவே இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருவதை நாம் காண முடிகிறது. 2014 ஆம் ஆண்டு விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றதில் இருந்து இந்தியா வலிமையான டெஸ்ட் அணியாக உருவானது. அவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக இலங்கை வெஸ்ட் இண்டீஸ் தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்றது .

இந்திய அணி சர்வதேச அரங்கில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருந்தபோது இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக இருந்தவர் எம்எஸ்கே பிரசாத். இந்நிலையில் அவர் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட வேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார் . இது தொடர்பாக செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர் இந்த கருத்தை கூறியிருக்கிறார் .

இது பற்றி பேசி இருக்கும் பிரசாத் ” ரகானே நீண்ட இடைவேளைக்குப் பின்பு மீண்டும் அணிக்குள் வந்து உடனடியாக துணை கேப்டனாக நியமிக்கப்படும்போது விராட் கோலி ஏன் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படக்கூடாது? என கேள்வி எழுப்பி இருக்கிறார். விராட் கோலி தலைமையில் தான் இந்தியா ஆஸ்திரேலியாவில் சென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தகுதி பெறும் போதும் விராட் கோலி தான் கேப்டன் ஆக இருந்தார் . 2021-2023 ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் போதும் ஒரு வருடம் விராட் கோலி தான் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்தார்”என்று சுட்டிக் காட்டினார் .

- Advertisement -

மேலும் இதுபற்றி தொடர்ந்து பேசிய அவர் ” தேர்வாளர்கள் மீண்டும் விராட் கோலியை டெஸ்ட் கேப்டனாக நியமிக்க வேண்டும். தேர்வாளர்கள் ரோகித் சர்மாவிற்கு மாற்றாக ஒரு கேப்டனை தேர்வு செய்ய விரும்பினால் அதற்கு சரியான தீர்வு விராட் கோலி தான்” என்று தெரிவித்தார். மேலும் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்பது பற்றிய விராட் கோலியின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் எதிர்கால இந்திய அணியை வழிநடத்த விராட் கோலி ஒரு சரியான தேர்வாக இருப்பார் என்று தெரிவித்திருக்கிறார் எம்எஸ்கே பிரசாத் .