IND vs AFG.. முதல் டி20 போட்டியில் கோலி விலகல்.. காரணத்தை சொன்ன ராகுல் டிராவிட்

0
1090

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்கவுள்ளது. நாளை மொஹாலி மைதானத்தில் முதல் டி20 போட்டியிலும், 2வது டி20 போட்டி இந்தூர் மைதானத்திலும், 3வது டி20ன் போட்டி பெங்களூரு மைதானத்திலும் நடக்கவுள்ளது. நீண்ட ஆண்டுகளாக தாமதமான இந்த டி20 தொடர், தற்போது இந்திய வீரர்களுக்கு மிகமுக்கிய தொடராக அமைந்துள்ளது.

2 நாட்களுக்கு முன் இந்த டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் 14 மாதங்களுக்கு பின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ளனர்.

- Advertisement -

கடைசியால ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 பக்கமே வரவில்லை. தற்போது டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கியதால், இருவரும் மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளனர். டி20 உலகக்கோப்பைக்கு முன் இந்திய அணி பங்கேற்கும் கடைசி டி20 தொடர் என்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் இருவரும் காயம் காரணமாக விலகியுள்ளனர். அதேபோல் ஜடேஜா, பும்ரா, சிராஜ் உள்ளிட்டோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அக்சர் படேல், முகேஷ் குமார், ஆவேஷ் கான் உள்ளிட்டோர் டி20 அணியில் இடம்பிடித்துள்ளனர்.

கடந்த இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதிய போது விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். நீண்ட நாட்களாக சதம் அடிக்க முடியாமல் போராடி வந்த விராட் கோலி, இந்த போட்டியில் சதம் விளாசி மீண்டும் ஃபார்முக்கு வந்தார். இதனால் விராட் கோலி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்க இருந்தது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்த நிலையில் நாளைய போட்டிக்கு முன்பாக இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல் டிராவிட் பேசும் போது, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாட மாட்டார். சொந்த காரணங்கள் காரணமாக முதல் டி20 போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இதனால் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தான் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் விராட் கோலி இடத்தில் சுப்மன் கில் களமிறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.