“வின்டேஜ் விராட் கோலி இஸ் பேக்” கிங் கோலி சதம்… ஹைதராபாத் அணியை வதம் செய்த கோலி-டு பிளசிஸ் ஜோடி.. ஆர்சிபி அபார வெற்றி!

0
1419

விராட் கோலி சதம், டு பிளசிஸ் அரைசதம் அடித்துக்கொடுக்க, ஹைதராபாத் அணியை ஏட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது. பிளே-ஆப் கனவையும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய லீக் போட்டியில் ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணிக்கு அபாரமாக விளையாடிய ஹென்றிச் கிளாசன் 51 பந்துகளில் 104 ரன்கள் விளாசினார். இதில் ஆறு சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கும். இறுதியில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்தது ஹைதராபாத் அணி.

- Advertisement -

கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டியில் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு டூ பிளஸ் இஸ் மற்றும் விராட் கோலி இருவரும் ஓபனிங் செய்தனர் இந்த ஜோடி ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்களை அனாகசமாக எதிர் கொண்டு முதல் ஓவரிலிருந்து பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விலாசி வந்தது. இருவருமே விக்கெட் இழக்காமல் அரை சதம் அடித்து ஹைதராபாத் அணிக்கு தலைவலியை உண்டாக்கினார்.

வழக்கமாக அரைசதம் கடந்த பிறகு சற்று நிதானம் காட்டி வரும் வீராட் கோலி, இப்போட்டியில் இன்னும் அதிரடியை வெளிப்படுத்தி 62 பந்துகளில் சதம் விளாசினார். ஐபிஎல் வரலாற்றில் இவர் அடிக்கும் ஆறாவது சதம் இதுவாகும். அதற்கு அடுத்த பந்தே சிக்ஸர் அடிக்கப்பார்த்து கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மறுபக்கம் மிகச்சிறப்பாக விளையாடி வந்த டு பிளசிஸ் 47 பந்துகளில் 71 ரன்கள் விளாசி அவுட் ஆனார். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 172 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அடுத்து உள்ளே வந்த மேக்ஸ்வெல் ஆட்டத்தை முடித்துக் கொடுக்க, இரண்டு விக்கெட் இழப்பிற்கு 19.2 ஓவர்களில் இலக்கை எட்டிய ஆர்சிபி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நல்ல ரன்ரேட் பெற்று, புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பினுக்குத் தள்ளி நான்காவது இடத்திற்கும் முன்னேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ரன்ரேட் -0.128 ஆகும்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி இரு அணிகளும் தங்களது கடைசியில் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் அல்லது அதிக பந்துகள் வித்தியாசத்தில் கடைசி லீக் போட்டியை வென்றாக வேண்டும். அப்போதுதான் ஆர்சிபி அணியை பின்னுக்குத்தள்ளி அதிக ரன்ரேட் பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற சிக்கலுக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி தள்ளப்பட்டுள்ளது.