என்னுடைய கேப்டன் சுரேஷ் ரெய்னா.. எனக்காக அந்த வாய்ப்பை வாங்கி தந்தவர் அவர்தான் – விராட் கோலி பேச்சு

0
378
Virat

இந்திய கிரிக்கெட் தாண்டி தற்போது உலகக் கிரிக்கெட்டில் பல இளம் வீரர்களுக்கு முன்மாதிரி வீரராக விராட் கோலி திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கிரிக்கெட்டில் தன்னுடைய இளம் வயதில் சுரேஷ் ரெய்னா எவ்வாறு உதவி செய்திருக்கிறார் என்பது குறித்து விராட் கோலி பேசியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு மிகவும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அதிரடியாக நுழைந்து இருக்கிறது. மேலும் இன்று பிளே ஆப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் ராஜஸ்தான் அணியை சந்தித்து விளையாட இருக்கிறது.

- Advertisement -

இதற்கு முன்பாக பெங்களூர் மைதானத்தில் விராட் கோலி சென்னை அணிக்கு எதிராக விளையாடுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பொழுது சுரேஷ் ரெய்னா அவருடன் சந்தித்து பேசி இருந்தார். மேலும் விராட் கோலிக்கு அடுத்து நடக்கக்கூடிய எல்லாவற்றுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

தற்பொழுது சுரேஷ் ரெய்னா பற்றி பேசியிருக்கும் விராட் கோலி கூறும் பொழுது ” வளர்ந்து வரும் வீரர்களுக்கான அணியில் நான் இடம் பெற்று விளையாடிக் கொண்டிருந்த பொழுது, என்னுடைய அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா இருந்தார். ஆனால் அப்பொழுது நான் பேட்டிங்கில் வரிசையில் விளையாடிய காரணத்தினால் எனக்கு போதிய அளவு பேட்டிங் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா நான் பேட்டிங் செய்வதை வலையில் பார்த்து, அப்போது பயிற்சியாளராக இருந்த பிரவீன் ஆம்ரே இடம் துவக்க வீரராக என்னை விளையாடுவதற்கு வற்புறுத்தி இடத்தை வாங்கி கொடுத்தார். பின்பு நான் அப்போதைய இந்தியத் தேர்வுக்குழு தலைவர் வெங்சர்கார் முன்னிலையில் சதம் அடித்தேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட்டில் தரத்துக்கு மரியாதை கிடையாது.. கம்பீர்தான் இதை மாற்ற சரியான ஆள் – வாசிம் அக்ரம் பேச்சு

மேலும் சுரேஷ் ரெய்னா இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்ப நிலையில், இந்திய கிரிக்கெட்டுக்கு மிக அதிகம் செய்திருக்கக் கூடிய விராட் கோலிக்காக ஆர் சி பி அணி முதல்முறையாக இந்த ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுவது சிறப்பானதாக இருக்கும் என தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.