இந்திய அணிக்கு நட்சத்திர வீரர் விராட் கோலி தான் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய அளவுக்கு கிரிக்கெட் வட்டாரத்தில் தன்னுடைய நண்பர் யார்? என்று கூறியிருக்கிறார்.
விராட் கோலியின் ஆரம்ப காலகட்டத்தில் இந்திய அணியில் ரோகித் சர்மா யுவராஜ் சிங் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். இத்துடன் அவருக்கு தோனி உடனும் நல்ல நட்பு காணப்பட்டது. ஐபிஎல் தொடரில் ஏபி டிவில்லியர்ஸ் மிகவும் நெருங்கிய நண்பராக இருந்து வந்திருக்கிறார்.
மேலும் விராட் கோலி இந்திய அணியின் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பொழுது, மகேந்திர சிங் தோனி அவருக்கு தனிப்பட்ட முறையில் ஆறுதலாக மெசேஜ் அனுப்பி இருந்தார். அந்த நேரத்தில் தனக்கு அது குறித்து மெசேஜ் அனுப்பிய ஒரே இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தோனிதான் என விராட் கோலி வெளிப்படையாக சொல்லி இருந்தார்.
எனவே இருவரும் அடிக்கடி பேசிக் கொள்ளாவிட்டாலும் முக்கியமான விஷயங்களை கலந்தாலோசிக்கக்கூடிய இடத்தில் முக்கியமான நேரத்தில் இருப்பார்கள் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் விராட் கோலி தான் எல்லா விஷயங்களையும் பகிரக் கூடிய இடத்தில் வேறு ஒரு வீரரை குறிப்பிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து விராட் கோலி பேசும் பொழுது “இஷாந்த் சர்மாவும் நானும் இயல்பாகவே ஆரம்பத்தில் இருந்து இணைந்திருக்கிறோம். நாங்கள் இணைந்து விளையாடினாலும் விளையாட விட்டாலும் அது ஒரு முக்கிய விஷயமாக எங்கள் நட்பில் இருந்ததில்லை. நாங்கள் எப்பொழுதுமே ஒன்றாகவே சேர்ந்து இருந்து வந்திருக்கிறோம்”
இதையும் படிங்க : ரோகித் யுவராஜ் என்னை.. சீரியஸாவே டிராவிட் தண்டிச்சிருக்கார்.. நாங்க இத அனுபவிச்சோம் – ஓஜா பேட்டி
“எந்த ஜட்ஜ்மெண்ட்டும் இல்லாமல், முழுமையான புரிதல் உடனும், முழுமையான பச்சபத்துடனும், அவரிடம் எல்லாவற்றையும் என்னால் மிகவும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முடியும். எனவே அவர் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நபராக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்