ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் ரஜத் பட்டிதாரை குறிப்பிட்ட ஒரு காரணத்திற்காக அந்த அணி ரசிகர்கள் பெரிய அளவில் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் சீசனுக்கு விராட் கோலி மீண்டும் ஆர்சிபி அணிக்கு கேப்டனாக வருவார் என்று ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து இருந்த நிலையில், விராட் கோலி மீண்டும் கேப்டனாக விரும்பவில்லை. இந்த நிலையில் அவருடைய ஆதரவுடன் புதிய கேப்டனாக இந்திய இளம் வீரர் ரஜத் பட்டிதாரை ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
இதற்காக அன்பை கொடுங்கள்
இதுகுறித்து பேசி உள்ள விராட் கோலி கூறும் பொழுது “அடுத்து உங்களின் கேப்டனாக வந்திருக்கும் இந்த பையன் உங்களை நீண்ட காலம் ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்து வழிநடத்த போகிறார். எனவே இந்த காரணத்திற்காக உங்களுடைய பெரிய அளவிலான அன்பையும் ஆதரவையும் நீங்கள் இவருக்கு கொடுக்க வேண்டும்”
“ரஜத் பட்டிதார் ஒரு அற்புதமான திறமை கொண்ட வீரர். இது அனைவருக்கும் தெரியும். அவர் இந்த ஐபிஎல் அணிக்காக தன்னால் முடிந்த மிகச்சிறந்ததை செய்யப் போகிறார். இந்த அணியை அடுத்த கட்டத்திற்கு அவர் முன்னோக்கி எடுத்துச் செல்வார். இந்த இடத்தில் இருக்க என்ன தேவையோ அனைத்தையும் அவர் வைத்திருக்கிறார்”
இது அற்புதமான ஒரு அணி
“இந்த சமயத்தில் எங்களிடம் ஒரு அற்புதமான அணி கிடைத்திருக்கிறது. இந்த அணியில் சில அற்புதமான வீரர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். அணிக்குள் நிறைய திறமைகள் இருக்கின்றன. இப்படியான அணிக்கு நான் தனிப்பட்ட முறையில் உதவுவதற்கு மிகவும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறேன்”
இதையும் படிங்க : சிஎஸ்கே பக்கத்துல கூட ஆர்சிபி வர முடியாது.. 2 டீம்க்கும் ஆடி இருக்கேன்.. இதான் வித்தியாசம் – சதாப் ஜகாதி பேட்டி
“இந்த அழகான நகரத்திற்கு இது போன்ற ஆச்சரியமான ரசிகர்களுக்கு முன்னால் மீண்டும் வந்திருப்பது எனக்கு அற்புதமாக இருக்கிறது. மற்ற சீசன்கள் போலவே நான் உற்சாகமும் ஆர்வத்துடனும் காத்திருக்கிறேன். 17 ஆண்டுகளாக என்னால் இந்த அணிக்கு கொடுக்க முடிந்த அனைத்தையும் நான் தொடர்ந்து கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இந்த பதினெட்டாவது வருடத்திலும் நான் செய்ததை மீண்டும் செய்வேன்” என்று கூறியிருக்கிறார்.






