811 ரன்ஸ்.. இது கிரிக்கெட்டே கிடையாது.. இது வெறும் பேட்டிங்.. பவுலர்களுக்கு அநியாயம் – கம்பீர் கொதிப்பு

0
6

​இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் 811 ரன்கள் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கவுகாத்தி கிரிக்கெட் பிட்ச் பௌலர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் இருந்ததாக இந்திய அணியின் ஹெட் கோச் கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

​இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 405 ரன்கள் குவித்து பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, ஷுப்மன் கில்லின் அதிரடி இரட்டை சதத்தின் உதவியோடு இந்த பிரம்மாண்ட இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

- Advertisement -

​இரு அணிகளின் பௌலர்களும் இணைந்து 811 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில், பௌலர்களுக்கு எந்தவித உதவியும் செய்யாத இதுபோன்ற ஃபிளாட் விக்கெட்டுகள் கிரிக்கெட் விளையாட்டின் சமநிலையை பாதிக்கின்றன என்ற கவலைகள் எழுந்துள்ளன.

​இதுகுறித்து கௌதம் கம்பீர் பேசும்போது, “நான் வெளிப்படையாகச் சொல்வதானால், பேட் மற்றும் பால் இடையே சரியான போட்டி இருக்க வேண்டும், ஆனால் இது கிரிக்கெட் கிடையாது, இது வெறும் பேட்டிங் மட்டுமே. 400 ரன்கள் அடித்து அதை சேஸ் செய்வது சாதனைக்கும் ரசிகர்களுக்கும் சிறப்பாக இருக்கலாம், ஆனால் ஒரு உண்மையான கிரிக்கெட் ரசிகராகவும் கோச்சாகவும் பௌலர்கள் மீது எனக்கு அனுதாபம் இருக்கிறது. இதுபோன்ற பிட்ச்சில் பௌலிங் செய்வது பௌலர்களுக்கு நியாயமானது அல்ல”

- Advertisement -

“பௌலர்களின் புள்ளி விபரங்களை மட்டுமே பார்த்து நாம் அவர்கள் மீது கடுமையாக நடந்துகொண்டால், புதிய பௌலர்களை உருவாக்க முடியாது.
​அவர்களுக்கு நாம் கொஞ்சம் சப்போர்ட் அளிக்க வேண்டும். அறிமுகப் போட்டியில் விளையாடும் ஆகிப் நபி போன்ற வீரர்களுக்கு அழுத்தம் நிறைந்த சூழலில் வாய்ப்பு அளிப்பதே நல்லது. குர்னூர் போன்ற வீரர்களை மிடில் ஓவர்ஸ்களில் பௌலிங் செய்ய வைத்து நல்ல ஸ்டேட்ஸ் பெற வைக்க முடியும், ஆனால் பவர் பிளே மற்றும் டெத் ஓவர்ஸ் போன்ற கடினமான சூழ்நிலைகளில் அவர்களை எக்ஸ்போஸ் செய்வதே இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு நல்லது.” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -