எனக்கு அந்த பலவீனம் தான் பலமே.. அதிரடிய ஆடற முடிவை மாத்திக்க காரணம் அந்த வீரர்தான் – விராட் கோலி பேட்டி

0
3
Virat

இன்று ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்றது. இந்த போட்டியில் விராட் கோலி இறுதிவரை நின்று 38 பந்தில் 69 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். மேலும் போட்டிக்குப் பிறகு சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

இந்த போட்டியில் மூன்றாவது இடத்தில் வந்த தேவ்தத் படிக்கல் 26 பந்துகளில் அதிரடியாக 61 ரன்கள் எடுத்து சிறப்பான துவக்கத்தை கொடுத்தது விராட் கோலி தொடர்ந்து ஆட்டத்தை எடுத்துச் செல்வதற்கு வசதியாக அமைந்தது.

- Advertisement -

இது இருந்தாலே போதும்

தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விராட் கோலி விளையாடுகிறார். எனவே அவருக்கு போதிய போட்டி பயிற்சி கிடைப்பதில்லை. ஆனாலும் அவர் சிறப்பாக செயல்படுவது எப்படி? என்பது குறித்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து விராட் கோலி கூறும் பொழுது “நான் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி இருந்தேன். எனவே எனக்கு அந்த ரிதம் தொடர்பு இருந்தாலே போதும் என்று தெரியும். மேலும் நான் உடன் தகுதிக்காக மிகவும் கடுமையாக எப்பொழுதும் உழைத்து வந்திருக்கிறேன். எனவே இதெல்லாம் சரியாக அமைந்தாலே போதும் என்று உணர்ந்தேன்”

- Advertisement -

இது நல்லதுதான்

“நான் அதிக கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வருகின்ற காரணத்தினால் எனக்கு நல்ல ஓய்வு கிடைக்கிறது. இதனால் என்னால் மீண்டும் புத்துணர்ச்சியாக திரும்பி வர முடிகிறது. எனவே நான் ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடுவது இன்னொரு வகையில் வசதியாகவே இருக்கிறது”

இதையும் படிங்க : ஆர்சிபி அஸ்வினுக்கு பேட்டால் பதில்.. 16 வருடங்களுக்கு பிறகு சாதனை வெற்றி.. ஹைதராபாத் பரிதாப தோல்வி

“படிக்கல் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடினார். நான் ஆரம்பத்திலேயே அதிரடியாக பவர் பிளேவில் விளையாட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவர் சிறப்பாக தொடங்கிய காரணத்தினால் அவருக்கு சிங்கிள் கொடுத்து இடையில் பவுண்டரி அடித்தால் போதும் என்ற முடிவுக்கு வந்தேன். உள்நாட்டு கிரிக்கெட்டில் அனைத்து வடிவத்திலும் அவர் சிறப்பாக விளையாடியிருக்கிறார். இன்று மிகச் சிறப்பாக விளையாடினார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -