சஞ்சு இதை செய்வதே இல்லை.. அவருக்கு ஓய்வு கொடுத்து என்ன பயன்.? கம்பீரை மறைமுகமாக சாடிய அஸ்வின்

0
2

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் வெளியே அமர வைக்கப்பட்டிருப்பது தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து t20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் நிலையில் முதல் போட்டியில் மட்டுமே வாய்ப்பு பெற்ற சஞ்சு அதற்குப் பிறகான இரண்டு போட்டிகளில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அவருக்கு பதிலாக தொடக்க இடத்தில் வைபவ் சூரியவன்சி விளையாடி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் டி20 எதிர்காலம் இனி அவ்வளவுதானா? என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அது குறித்து விளக்கம் அளித்திருக்கும் கம்பீர், அப்படி எதுவும் கிடையாது ஒவ்வொரு தொடருக்கும் வீரர்களுக்கு இது போன்ற ஓய்வு கொடுக்கப்படும் என்று விளக்கம் அளித்திருந்தார். இந்த சூழ்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் கம்பீரின் இந்த முடிவை மறைமுகமாக சாடி பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “சஞ்சுவை பொறுத்தவரை அவர் தற்போது டி20 தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் அவர் விளையாடவில்லை இதனால் அவருக்கு ஓய்வு கொடுத்து என்ன பயன்? அப்படி அவருக்கு ஓய்வு கொடுத்தே தீர வேண்டும் என்றால் ஜிம்பாவே சுற்றுபயணத்திற்கு பிறகு ஓய்வு கொடுத்திருக்கலாம். அவர் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார்கள். இதனால் அவர் எதற்காக ஓய்வெடுக்க விரும்புகிறார். இதில் ஒரு பயனும் கிடையாது இது நியாயமற்றது. ஆனால் இதுதான் நிலைமை” என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -