ஆர்சிபி அஸ்வினுக்கு பேட்டால் பதில்.. 16 வருடங்களுக்கு பிறகு சாதனை வெற்றி.. ஹைதராபாத் பரிதாப தோல்வி

0
5
Virat

இன்று ஐபிஎல் 19வது சீசனின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நடப்பு சாம்பியன் ஆக முதல் முறையாக ஆர்சிபி அணி ஒரு போட்டியில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இஷான் கிஷான் கலக்கல்

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா 7, ட்ராவிஸ் ஹெட் 11, ஹென்றி கிளாசன் 31, நிதீஷ்குமார் ரெட்டி 1 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதைத் தொடர்ந்து ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷான் 38 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 80 ரன்கள், அனிகேட் வர்மா 18 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் எடுத்தார்கள். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்தது. டஃபி மற்றும் செப்பர்டு 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

படிக்கல் அபாரம்

இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த ஆர்சிபி அணிக்கு பில் சால்ட் 7, ரஜத் பட்டிதார் 12 பந்துகளில் 31 ரன்கள், தேவ்தத் படிக்கல் 26 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 26 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கு அடுத்து இன்னொரு முனையில் இறுதி வரையில் களத்தில் நின்ற விராட் கோலி அரைசதம் அடித்து 38 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆர்சிபி அணி 15.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : ஆர்சிபி-ன் ஸ்பெஷல் பிளான்.. சிக்கிக்கொண்ட ஹைதராபாத்.. மீட்டெடுத்த இஷான் மற்றும் இளம் இந்திய வீரர்

மேலும் இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆர்சிபி அணி தோல்வி அடையும் என்று கூறியிருந்தார். ஆனால் ஆர்சிபி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் 16 வருடங்கள் கழித்து முதல் முறையாக 200 ரன்களை சின்னசாமி மைதானத்தில் சேஸ் செய்து இருக்கிறது.

- Advertisement -