எல்லோரும் சதம் அடித்ததை விராட் கோலி பார்த்தார் அதனால்தான் இதை செய்தார் – விராட் கோலி சதம் பற்றி கவாஸ்கர் பேச்சு!

0
1437
Viratkohli

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் நான்காவது மற்றும் கடைசி போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது!

இந்த டெஸ்ட் போட்டியில் நான்கு நாட்கள் முடிந்து இருக்க ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவஜா மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் அபாரமாக சதம் அடித்தார்கள். அஸ்வின் ஆறு விக்கட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து விளையாடிய இந்திய அணி மூன்றாவது நாள் ஆட்டம் முடிவின்போது சுப்மன் கில் சதத்துடன் மற்றும் விராட் கோலியின் அரை சதத்துடன் 190 ரன்கள் பின்தங்கி இருந்தது.

இன்று மீண்டும் விளையாட ஆரம்பித்த விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்ததோடு நிற்காமல் 186 ரன்கள் குவித்தார். சதத்தை எட்டு வரை ஐந்தே பவுண்டரிகள் மட்டுமே அடித்திருந்தார். அந்த அளவிற்கு ஆட்டத்தின் மீது கவனமாக இருந்து அணி 91 ரன்கள் முன்னிலை பெறுவதற்கு உறுதுணையாக நின்றார்.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர் ” ஒவ்வொரு சிறந்த பேட்டரும் சதம் பற்றி நினைக்கிறார்கள். ஒரு சதம் என்பது அவர் தனது விக்கட்டுக்கு வைத்திருக்கும் குறைந்தபட்ச விலை. அவர் பேட்டி ஃபார்மில் இல்லை என்று சொல்லப்பட்ட கடத்த இரண்டரை ஆண்டு காலத்தில் அவர் நன்றாகவே பேட் செய்தார். ஏழு அல்லது எட்டு அரை சதங்கள் அடித்து இருந்தார். எனவே அவர் பார்மில் இல்லை என்று ஒருபோதும் எனக்கு தோணவில்லை. இந்த காலகட்டத்தில் அவர் தனது முதல் தவறின் போதே ஆட்டம் இழந்து இருக்கிறார்!” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

சதம் அடிக்கும் வரை ஐந்து பௌண்டரிகள் மட்டுமே விராட் கோலி அடித்தது குறித்து பேசிய அவர் ” அவர் எவ்வளவு உறுதியானவர் என்பதை இது காட்டுகிறது. மலையளவு ரண்களை ஆஸ்திரேலியா குவித்த பின்பு இந்திய அணி மிகவும் பின்தங்கி இருக்கிறது என்று அவருக்கு தெரியும். 480 என்பது பெரிய ஸ்கோர் அதை இந்திய அணி நெருங்க வேண்டும். இந்த ஆட்டத்தில் உஸ்மான் கவஜா, கேமரூன் கிரீன் மற்றும் சுப்மன் கில் மூவரும் சதம் அடித்ததை அவர் பார்த்தார். இது அவருக்கு சதத்தை நோக்கி போக ஒரு வாய்ப்பாக அமைந்தது!” என்று கூறியுள்ளார்!

நேற்றைய ஆட்டம் முடிந்த பொழுது கவாஸ்கர் விராட் கோலி இதிலிருந்து இரட்டை சதம் நோக்கி விளையாடி அடித்தால்தான் சரியாக இருக்கும் அதை அவரால் செய்ய முடியும் என்று பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. அஸ்வின் அவசரப்பட்டு ஆட்டம் இழக்காமல் இருந்திருந்தால் என்று அவர் தனது இரட்டை சதத்தை அடித்திருப்பார்!