“கிங் கிங்கு தான்..” ஆஸ்திரேலியா அணிக்கெதிராக 5000 ரன்கள் அடித்து சாதனை… லெஜெண்ட்ஸ் பட்டியலில் இடம்பிடித்த விராட் கோலி!

0
1065

அனைத்து பார்மட்டிலும் சேர்த்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5000 ரன்களை அடித்துள்ள விராட் கோலி புதிய வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார். சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியலை பின்வருமாறு காண்போம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 173 ரன்கள் பின்தங்கியிருந்தது.

- Advertisement -

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 270 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் டிக்ளர் செய்தது. இறுதியாக இந்திய அணியை விட 443 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

444 ரன்கள் இலக்கை துரத்தியபோது, கில் 18 ரன்கள், ரோகித் சர்மா 43 ரன்கள் மற்றும் புஜாரா 27 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேற 93 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. அடுத்ததாக விராட் கோலி மற்றும் ரஹானே பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இரண்டாவது இன்னிங்சில் விராட் கோலி 7 ரன்கள் அடித்திருந்தபோது, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்டில் 2000 ரன்களை கடந்தார். அதைத்தொடர்ந்து 41 ரன்கள் அடித்தபோது, அனைத்து பார்மட்டிலும் சேர்த்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5000 ரன்களை கடந்தார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இந்த சாதனை படைத்த இரண்டாவது வீரர் ஆவார். சாதனை பட்டியலை கீழே காண்போம்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவர்கள் (அனைத்து பார்மட்டிலும்)

  1. சச்சின் டெண்டுல்கர் – 6707 ரன்கள்
  2. விராட் கோலி – 5003* ரன்கள்
  3. பிரையன் லாரா – 4714 ரன்கள்
  4. டெஸ்மாண்ட் ஹெனஸ் – 4495 ரன்கள்
  5. விவியன் ரிச்சர்ட்ஸ் – 4453 ரன்கள்

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் (டெஸ்டில்)

  1. 3630 – சச்சின் டெண்டுல்கர்
  2. 2434 – விவிஎஸ் லக்ஸ்மன்
  3. 2143 – ராகுல் டிராவிட்
  4. 2074 – சித்தேஸ்வர் புஜாரா
  5. 2037* – விராட் கோலி