சிஎஸ்கே ஆர்சிபி மேட்ச்.. விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்த சின்ன தல சுரேஷ் ரெய்னா

0
86
Virat

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெற்றது. நடப்பு ஐபிஎல் சீசனுக்கு நல்ல துவக்கத்தை ஆரம்பித்து வைத்த இந்த இரு அணிகளும், இதேபோல் நல்ல முடிவையும் ஏற்படுத்தி வைக்க இருக்கின்றன. இந்த இரு அணிகளும் மோதிக் கொள்ளும் போட்டிக்கும் முன்பாக சுரேஷ் ரெய்னா விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

தற்போதைய நிலவரப்படி புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி 14 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணிக்கு இன்னும் ஒரு போட்டி எஞ்சி இருக்கும் நிலையில், வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும், இல்லையென்றால் 18 ரன்னுக்கும் கீழான ரன்கள் வித்தியாசத்திலும், 11 பந்துகளை விட குறைவான பந்துகளில் தோல்வியும் ஏற்படும் பட்சத்திலும் ப்ளே ஆப் தகுதி பெற முடியும் என்கின்ற நிலையில் இருக்கிறது.

- Advertisement -

இதற்கு அப்படியே மாற்றாக ஆர்சிபி அணி சிஎஸ்கே அணிக்கு எதிராக போட்டியை வென்றாலும் கூட, குறைந்தபட்சம் 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது குறைந்தபட்சம் 11 பந்துகள் மீதம் வைத்தோ வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அப்படி நடக்கும் பொழுதுதான் அந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

மேலும் மே 18ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்த இரு அணிகளுக்கு இடையே நடக்க இருக்கும் முக்கிய போட்டிக்கு மழை ஆபத்து பெரிய அளவில் இருந்து வருகிறது. மழை குறுக்கீடு நிச்சயம் இருக்கும் என்ற நிலையில், போட்டி நடைபெறுமா? என்பது குறித்து இன்னும் தெளிவான செய்திகள் இல்லை.

தற்போது இந்த போட்டிக்காக சொந்த மைதானத்தில் முகாமிட்டிருக்கும் ஆர்சிபி அணி தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறது. மேலும் இங்கிலாந்து வீரர் வில் ஜேக்ஸ் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கக் கிளம்பி விட்டதால், அந்த அணியில் கிளன் மேக்ஸ்வெல் இல்லை டாம் கரன் யார் விளையாடுவார்கள்? என்று தெரியவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : சாம்சனை தீர்மானிக்க 5 நிமிடம் போதும்.. டி20 உலக கோப்பைல அவருக்கு இது ஹெல்ப் பண்ண போகுது – கம்பீர் பேட்டி

தற்போது பயிற்சியில் இருக்கும் விராட் கோலியை சுரேஷ் ரெய்னா சந்தித்திருக்கிறார். இதற்குப் பின்பாக டுவிட்டரில் அவர் பதிந்துள்ள செய்தியில் “சகோதரர் விராட் கோலி உங்களைச் சந்தித்தது மிகவும் சிறப்பானது. எப்பொழுதும் என் வாழ்த்துக்கள் உங்களுக்கு உண்டு” எனக் கூறியிருக்கிறார். ஏற்கனவே சுரேஷ் ரெய்னா இந்த முறை விராட் கோலிக்காக ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை வென்றால் மகிழ்ச்சி என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.