பேட்டிங் குறித்து மவுனத்தை கலைத்த விராட் கோலி.. குறை குறித்து பேச்சு

0
31

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது பேட்டிங் ஃபார்ம் குறித்து முதல் முறையாக மனம் திறந்து உள்ளார். 2022 ஆம் ஆண்டு விராட் கோலிக்கு அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. நடப்பாண்டிலும் அவர் ஒரு முறை கூட மூன்று எலக்கம் ரன்களை அடிக்கவில்லை.ஐபிஎல் தொடரில் கூட தனது வாழ்நாளில் முதல்முறையாக மூன்று முறை கோல்டன் டக் ஆகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

- Advertisement -

மேலும் டி20 கிரிக்கெட்டில் தரவரிசை பட்டியலில் முதல் 20 இடங்களுக்கு கீழ் விராட் கோலி தரவரிசையில் சரிந்தார். இங்கிலாந்து தொடரிலும் விராட் கோலி ஒரு முறை கூட அரைசதம் அடிக்கவில்லை. இதனை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் மட்டும் ஜிம்பாப்வே தொடரில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்த விராட் கோலி, தற்போது ஆசிய கோப்பை தொடருக்கு இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் தனது பேட்டிங் குறித்து பேசிய விராட் கோலி கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து சொதப்பினேன். அப்போது ஒருமுறை கூட நான் 20 ரன்களை தாண்டவில்லை. ஒரே தவறை திரும்பத் திரும்ப செய்தேன். ஆனால் இப்போது உள்ள நிலைமை அப்படி அல்ல. அப்போது நான் என்ன தவறு செய்தேன் என்று தெரிந்தது. ஆனால் இப்போது இதுதான் குறை, இதை சரி செய்தால் பேட்டிங்கில் திரும்பவும் ரன் குவித்து விடலாம் என்று சொல்ல முடியாது.

2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் எனக்கு பேட்டிங் சுத்தமாக வரவில்லை என்று எனக்கு தெரிந்தது. ஆனால் அப்படி ஒரு மனநிலையில் நான் இப்போது இல்லை. சொல்ல போனால் அது நல்லதுக்கு தான். என் பேட்டிங்கில் குறையில்லை. ஆனால் என்னால் ரன் மட்டும் அடிக்க முடியவில்லை இதனை போக்க நான் கடுமையான பயிற்சிகளை எடுத்து வருகிறேன்.

- Advertisement -

நான் செய்யும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு வருகிறேன். எனக்கான அனுபவத்தை தான் நான் மிகவும் பெரிய விஷயமாக கருதுகிறேன். இந்த கடின காலத்தை மீண்டு வந்து விட்டால் நான் எப்படி வன்குவிப்பேன் என்று எனக்குத் தெரியும் என்று விராட் கோலி கூறினார். விராட் கோலி தனது முதல் போட்டியில் வரும் 28ஆம் தேதி பாகிஸ்தான் எதிராக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.