விராட் கோலி இந்த இடத்தில் ஆடினால் தான் அணிக்கு லாபம் – ஆக்காஷ் சோப்ரா உறுதி

0
62
Aakash Chopra and Virat Kohli

தினேஷ் கார்த்திக் ஒன்றும் டிவில்லியர்ஸ் கிடையாது – பெங்களூரு அணி குறித்துப் பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா

இந்த ஆண்டு பெங்களூரு அணியை ஃபேப் டு பிளேசிஸ் தலைமை தாங்குகிறார். 2013 ஆம் ஆண்டு முதல் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடி வந்தது. விராட் கோலி தன்னுடைய கேப்டன் பதவியை கடந்து ஆண்டுடன் முடித்துக் கொண்டார்.

- Advertisement -

மறுப்பக்கம் பெங்களூரு அணிக்கு நம்பிக்கை விடி வெள்ளியாக இத்தனை வருடம் விளையாடி வந்த ஏபி டிவில்லியர்ஸ் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் இல்லாத பெங்களூர் அணியை இந்த ஆண்டு நாம் அனைவரும் பார்க்க போகிறோம்.

பெங்களூரு அணியில் இந்த விஷயங்களைச் செய்தால் அந்த அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாட அதிக வாய்ப்பு உள்ளது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா மற்றும் வாசிம் ஜாபர் கருத்துக் கூறியுள்ளனர். அவர்கள் கூறிய கருத்துக்களைப் பற்றி தற்போது பார்ப்போம்.

விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் இந்த இடத்தில்தான் விளையாடி ஆக வேண்டும் – ஆகாஷ் சோப்ரா

பெங்களூரு அணியில் கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் எந்த வீரரை விளையாட வைப்பதென்ற குழப்பம் கடைசி வரை இருந்தது. பொதுவாக இவ்வாறு குழப்பத்தில் எந்த அணியும் இருந்துவிடக் கூடாது. இம்முறை பெங்களூர் அணி ஆரம்பத்தில் இருந்து ஒரே வீரரை தான் மூன்றாவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும்.

- Advertisement -

கடந்த ஆண்டு விராட் கோலி ஓபனிங் இடத்தில் விளையாடினார். ஓபனிங் வீரராக விளையாடிய விராட் கோலி கடந்த ஆண்டு அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. இந்த ஆண்டு ஏபி டிவில்லியர்ஸ் அந்த அணியில் இல்லாத காரணத்தினால், விராட் கோலி இந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் தான் விளையாடியாக வேண்டும்.

நிறைய அனுபவம் உள்ள தினேஷ் கார்த்திக் அணியில் இருந்தாலும் அவர் ஏபி டிவில்லியர்ஸ் இடத்தை பூர்த்தி செய்வாரா என்று நம்மால் உறுதியாக கூற முடியாது. எனவே விராட் கோலியின் மூன்றாவது இடத்தில் விளையாடுவது சரியாக இருக்கும் என்றும், தினேஷ் கார்த்திக் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் விளையாடினால் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

பெங்களூரு அணியின் முதல் நான்கு இடங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் – வாசிம் ஜாபர்

விராட் கோலி மற்றும் ஃபேப் டு பிளேசிஸ் இருவரும் ஒரே மாதிரியாக விளையாட கூடியவர்கள். எனவே ஓபனிங் வீரராக ஃபேப் டு பிளேசிஸ் விளையாடினால் அவருக்கு துணையாக அனுஜ் ராவத் தான் விளையாட வேண்டும். சையது முஷ்டாக் அழி டிராபி தொடரில் டெல்லி அணிக்காக மிகச்சிறப்பாக அவர் விளையாடி இருக்கிறார். எனவே இவர்கள் இருவரும் ஓபனிங் விளையாடினால் பெங்களூர் அணிக்கு சிறப்பாக இருக்கும்.

பின்னர் மூன்றாவது இடத்தில் விராட் கோலி விளையாட வேண்டும். மூன்றாவது இடத்தில் விராட்கோலி விளையாடினால், அவர் போட்டியை நீண்ட நேரம் கொண்டு செல்வார் என்று நாம் உறுதியாக நம்பலாம். குறிப்பாக மிடில் ஓவர்களில் அவருடைய அதிரடி ஆட்டம் பெங்களூரு அணிக்கு கைகொடுக்கும்.

பின்னர் நான்காவது இடத்தில் கிளென் மேக்ஸ்வெல் விளையாடினால்,விராட் கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஜோடியின் அதிரடி ஆட்டம் எதிர் அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். எனவே இந்த வரிசையில் பெங்களூர் அணியில் வீரர்கள் விளையாடினால் அந்த அணியின் பலம் இன்னும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.