தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான ஐசிஐசிஐ தரவரிசை பட்டியலில் 57 மாதங்கள் கழித்து விராட் கோலி புதிய உச்சத்தை எட்டி இருக்கிறார்.
கடந்த தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடர் மற்றும் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர்களில் விராட் கோலியின் ன் பேட்டிங் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. அதே சமயத்தில் ரோஹித் சர்மாவுக்கு சிறிது சரிவு ஏற்பட்டு இருக்கிறது.
இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 785 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இதற்கு முன்பு அவர் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இடத்தில் இருந்தார். இதற்கு அடுத்து 57 மாதங்கள் கழித்து மீண்டும் இந்த இடத்தை பிடித்திருக்கிறார்.
அதே சமயத்தில் முதல் இடத்தில் இருந்து வந்த ரோகித் சர்மா தற்போது 775 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்திற்கு கீழே இறங்கி இருக்கிறார். இடையில் இரண்டாவது இடத்தில் நியூசிலாந்தின் டேரில் மிட்சல் 784 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தவிர்த்து தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில் 725 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்திலும், துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 682 புள்ளிகள் உடன் பத்தாவது இடத்திலும் இருக்கிறார்கள். கேஎல்.ராகுல் 654 புள்ளிகள் உடன் பதினோராவது இடத்தில் இருக்கிறார்.
இந்திய வீரர்கள் முதல் 11 இடங்களில் மொத்தம் ஐந்து இடங்களில் இருக்கிறார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் வலிமை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.
இதையும் படிங்க: 2வது ODI போட்டி.. இந்திய அணியின் முக்கிய மாற்றம்.. கேப்டன் கில்லி தன்னம்பிக்கை.. தொடரை கைப்பற்றுவோமா?
விராட் கோலி – 785
டேரில் மிட்செல் – 784
ரோஹித் சர்மா – 775
இப்ராஹிம் ஜட்ரன் – 764
சுப்மன் கில் – 725
பாபர் அசாம் – 722
ஹாரி டெக்டர் – 708
ஷாய் ஹோப் – 701
சரித் அசலங்க – 690
ஷ்ரேயாஸ் ஐயர் – 682
கேஎல்.ராகுல் – 654