2வது ODI போட்டி.. இந்திய அணியின் முக்கிய மாற்றம்.. கேப்டன் கில்லி தன்னம்பிக்கை.. தொடரை கைப்பற்றுவோமா?

0
11
Gill

இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

நியூசிலாந்து அணியில் மாற்றம்

கடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி எளிதாக வெல்லும் நிலையில் இருந்தது. ஜெமிஷன் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்ற போட்டி மிகவும் பரபரப்பான சூழ்நிலைகள் சென்றது. இறுதியாக ஹர்ஷித் ராணா மற்றும் கேஎல்.ராகுல் அதிரடியில் இந்தியா வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்த நிலையில் இன்று இரண்டாவதாக பந்து வீச இருக்கும் நியூசிலாந்து அணி ஜெய்டன் லேனாக்ஸ் என்ற வீரரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஒரு மாற்றத்துடன் அவர்கள் இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு வந்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்திய அணியின் மாற்றம்

இன்றைய போட்டிக்கு இந்திய அணியில் காயமடைந்து வெளியேறியிருக்கும் வாஷிங்டன் இடத்திற்கு ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி கொண்டுவரப்பட்டிருக்கிறார். ஆயுஸ் பதோனி அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடக்கவில்லை.

இதையும் படிங்க : ரோகித்தை விட விராட் கோலிதான் சிறந்த வீரர்.. அதற்கு மிக முக்கிய காரணம் இதுதான் – முகமது கைஃப் கருத்து

இந்த போட்டி குறித்து கேப்டன் கில் பேசும் பொழுது ” நாங்கள் டாஸ் வென்று இருந்தாலும் முதலில் பேட்டிங் செய்திருப்போம். நேற்று இரவில் இங்கு பனிப்பொழிவு வரவில்லை. எனவே இரண்டாவது பந்து வீச எங்களுக்கு பெரிய சிரமம் இருக்காது என்று நினைக்கிறேன். மிடில் ஓவர்களில் விக்கெட் கைப்பற்றுவது பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால் அது எங்களுக்கு போன போட்டியில் நடைபெற்றது. மேலும் இந்த போட்டி பெரிய போட்டியாக இருக்கும்” என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -