“ஐபிஎல்-ல் கோலி விளையாடாமல் போகலாம்” – கவாஸ்கர் பேச்சுக்கு ரசிகர்கள் கோபம்.. காரணம் என்ன?

0
225
Virat

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விராட் கோலி விலகி இருக்கிறார்.

விராட் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை சில நாட்களுக்கு முன்பாக பிறந்தது. இதன் காரணமாக குடும்பத்துடன் இருக்க வேண்டிய சூழலினால், அவர் இந்த தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் விராட் கோலி கடைசியாக ஒரு டெஸ்ட் தொடரை கூட முழுமையாக உள்நாட்டில் இழந்தது கிடையாது. அவர் மிகச் சிறப்பான தடகள உடல் தகுதியை தொடர்ந்து பராமரிப்பது தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதற்குதான்.

இந்திய அணிக்காக தொடர்ந்து செயல்பட வேண்டி அவர் உணவு விஷயத்தில் பல தியாகங்கள் செய்திருக்கிறார். கிரிக்கெட்டில் அவருடைய அர்ப்பணிப்பு என்பது எல்லோராலும் வியந்து பார்க்கக்கூடிய ஒன்று. அவ்வளவு கடினமான உழைப்பை களத்தில் கொட்டுவார்.

இதன் காரணமாகவே இளம் விளையாட்டு வீரர்கள் தாண்டி விராட் கோலி பல இளைஞர்களுக்கு முன் உதாரணமாக இருந்து வருகிறார். அதே சமயத்தில் அவர் குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுப்பதிலும் முன் உதாரணமாக இருந்து வருகிறார். தொழிலுக்கும் குடும்பத்திற்கும் ஆன வித்தியாசத்தை சரியான முறையில் புரிந்து செயல்படுகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் சுனில் கவாஸ்கர் விராட் கோலி குறித்து பேசும்பொழுது “அவர் தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காகஇங்கிலாந்து தொடரில் விளையாடவில்லை. எனவே அவர் ஐபிஎல் தொடரையும் தவறவிட்டாலும் விடலாம்”என்று கூறியிருக்கிறார்.

அவருடைய இந்த பேச்சு தற்பொழுது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணிக்காக விளையாடாமல் இருப்பவர்கள், ஐபிஎல் தொடரிலும் விளையாடாமல் இருப்பார்களா? என்பது போன்ற பேச்சாக அது பார்க்கப்படுகிறது.

எனவே இது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கவாஸ்கர் பேச்சுக்கு தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இப்பொழுது குழந்தை பிறந்து, அவர் தேவையான அளவு குடும்பத்துடன் இருந்து எல்லா பொறுப்புகளையும் நிறைவேற்றி இருக்கிறார். எனவே அவர் அடுத்து வந்து ஐபிஎல் தொடரில் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 78 வருட உலக கிரிக்கெட் வரலாறு.. கடைசி இடத்தில் 2 பேட்ஸ்மேன் சதம்.. சிஎஸ்கே துஷார் தேஷ்பாண்டே சாதனை

இப்படி இருக்கும் பொழுது அவர் தொடரை ஏன் தவறவிட வேண்டும் என்பதுதான் கவாஸ்கர் மீதான ரசிகர்களின் கோபத்திற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.