விராட் கோலி ஒரு முக்கியமான தப்பை நேற்று செய்துவிட்டார் – தினேஷ் கார்த்திக் விமர்சனம்!

0
1064
Viratkohli

நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் , ரண் சேஸிங்கில் விராட் கோலி கோட்டைவிட , உலகக் கோப்பை ஆண்டில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கோ. ஆகியோரின் கைகள் உயர , இந்த தொடர் தோல்விகள் இந்தியாவின் இதயத்தை உடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை .

இந்தியா அணியின் தோல்வி குறித்தும் , வீரர்களின் பேட்டிங் , பவுலிங் , குறித்தும் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை , எடுத்துரைத்து வருகிறார்கள். அந்த வரிசையில் தினேஷ் கார்த்திக்கும் தனது கருத்தை பதிவுசெய்துள்ளார் .

- Advertisement -

இதுகுறித்து இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்திக் கூறுகையில் “
விராட் கோலி, தனது 21வது பந்தில் தனது முதல் பவுண்டரியை அடித்தார், இவ்வாறு பொறுமையாக ஆட்டத்தை தொடங்கிய பின் முக்கியமான தருணத்தில் விராட் கோலியின் விக்கெட் விழுந்தது , போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது ” என்று கூறினார் .

மேலும் அவர் கூறுகையில் ” KL ராகுல் மற்றும் விராட் கோலி ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார்கள் . அதில் விராட் கோலி மிகவும் மெதுவாக தொடங்கினார், ஆனால் KL ராகுல் நிதானமாக ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து கொண்டிருந்தார் . ஹர்திக் பாண்டியா வந்ததும் ஷாட்களை ஆடத் தொடங்கினார். விராட் கோலி அவுட் ஆன தருணத்தில், அதன் பின் விஷயங்கள் அடியோடு மாறின. ஹர்திக் ஒரு விதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில் அவர் பெரிய ஸ்வீப்புகளை விளையாட முயற்சிக்கவில்லை. அவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடினார்” என்று கூறினார்.

விராட் கோலியின் விக்கெட் பற்றி பேசும்போது “அவர் மிகவும் நன்றாகத் தொடங்கினார் மற்றும் சில கவர்ச்சிகரமான ஷாட்களை விளையாடினார். அவர் நடுவில் சுழலில் சிறிது தடுமாறினார், ஆனால் வழக்கமான கோலி பாணியில் அதை எதிர்த்துப் போராடினார். அவர் மிகப்பெரிய தவறு ஒன்று செய்தார். அது ஆஷ்டன் அகர் வீசிய கடைசி ஓவர். முந்தைய ஓவரில் அவர் முயற்சித்ததை போல் மீண்டும் முயற்சி செய்தது ?, அந்த ஷாட்டை அவர் தேர்ந்தெடுத்திருக்க வேண்டுமா? அவர் அணியை வெற்றிக்கு எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக நினைத்து அவர் மிகவும் ஏமாற்றமடைந்திருப்பார் , அவரால் அவ்வாறு செய்யமுடியவில்லை என்பதால் ”என்று பேசினார் .

- Advertisement -

ஆஷ்டன் அகர் பற்றி தினேஷ் கார்த்திக் கூறுகையில் ” நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசி ,இந்திய பேட்டர்களுக்கு அதிக நெருக்கடியை கொடுத்தார் . அதனால் தான் வீரர்கள் ஷாட்டுகளுக்கு முயற்சி செய்து விக்கெட்களை இழக்க , ஆஸ்திரேலிய அணி வெற்றி எளிதானது ” என்று கூறினார் .