அடுத்த டெஸ்டில் ஆடினாலே போதும்.. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சின், தோனிக்கு பிறகு புதிய ரெக்கார்டை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!

0
5089

இரண்டாவது டெஸ்டில் விராட் கோலி விளையாடினாலே போதும். சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டி பல்வேறு சாதனைகளை படைப்பார். இந்த சாதனையை சச்சின், தோனி, டிராவிட் ஆகியோர் செய்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்களுள் ஒருவராக திகழ்ந்துவரும் விராட் கோலி இதுவரை பேட்டிங்கில் எண்ணற்ற பல சாதனைகளை படைத்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக பேசப்பட்டு வரும் விராட் கோலி அவரை மிஞ்சிய பல சாதனைகளையும் படைத்திருப்பது வரலாறு.

- Advertisement -

இந்திய அணிக்கு மூன்றுவித போட்டிகளிலும் கேப்டனாக திகழ்ந்து வந்த விராட் கோலி தற்போது சக வீரராகவே அணியில் பயணித்து விளையாடி வருகிறார். கிட்டத்தட்ட 3 வருடம் சதம் அடிக்காத விராட் கோலி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வந்தார். கடந்த ஓராண்டாக கிட்டத்தட்ட ஐந்து சதங்களை விளாசி அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் சென்றிருக்கும் இந்திய அணியில் இடம் பெற்று டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் விராட் கோலி, முதல் டெஸ்ட் போட்டியில் 76 ரன்கள் அடித்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.

வருகிற இரண்டாவது டெஸ்ட் போட்டி விராட் கோலிக்கு 500 ஆவது சர்வதேச போட்டியாகும். இதன் மூலம் சாதனை பட்டியலிலும் இணைய உள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே இந்திய வீரர்கள் மத்தியில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், தோனி ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் 500க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி உள்ளனர். அடுத்த டெஸ்டில் இவர் ஆடும் பட்சத்தில் இந்த சாதனை பட்டியலில் விராட் கோலி இணைய உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகள் விளையாடிய இந்திய வீரர்கள்:

  1. சச்சின் டெண்டுல்கர் – 664 போட்டிகள்
  2. எம் எஸ் தோனி – 538 போட்டிகள்
  3. ராகுல் டிராவிட் – 509 போட்டிகள்
  4. விராட் கோலி – 499 போட்டிகள்

ஒட்டுமொத்தமாக பார்க்கையில், சர்வதேச கிரிக்கெட்டில் 500 மற்றும் அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய வீரர்களில் 10ஆவது வீரராக விராட் கோலி இந்த சாதனையை படைப்பார்.