சச்சின் தோனி யுவராஜ் போன்ற ஜாம்பவான்களின் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ள விராட் கோலி

0
465
Dhoni Kohli and Tendulkar

இந்திய அணி தற்போது மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு முன்பு நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி இல்லாத காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது . கூடவே ரோஹித் ஒருநாள் அணியில் நிரந்தர கேப்டனாக இந்த தொடர் முதல் பொறுப்பெடுத்து கொள்ள இருந்ததால் தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். 3 போட்டிகளாக நடைபெறும் இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. வழக்கத்திற்கு மாறாக ரோகித்துடன் ரிஷப் பண்ட் துவக்க வீரராக களமிறங்கினார். ஆனால் இந்த முயற்சிகள் எதுவும் பெரிதாக பதில் அளிக்காத காரணத்தினால் இந்திய அணி 237 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சூரியகுமார் 64 ரன்கள் எடுத்தார். அவருடன் இணைந்து மிடில் ஆர்டரில் விளையாடிய ராகுல் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கண்ணழகி அரை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

இந்த போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்த்த மற்றொரு முக்கியமான விஷயம் விராட் கோலி. அவருடைய அடுத்த சங்கத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தாலும் மற்றுமொரு முக்கிய சாதனையை இந்த ஆட்டத்தின் மூலம் நிகழ்த்தியிருக்கிறார் கோலி. இந்திய நாட்டில் மட்டும் சுமார் 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கோலி. இதற்கு முன்பு இந்த சாதனையை சச்சின், அசாருதீன், தோனி மற்றும் யுவராஜ் ஆகியோர் தான் வைத்திருந்தனர். தற்போது இந்த பட்டியலில் முன்னாள் இந்திய கேப்டன் கோலியும் இணைந்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் கோலி 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

குறைவான ரன்களை சிறப்பாக டிஃபென்ட் செய்வதில் சிறந்தவராக கருதப்படும் ரோகித் இந்த போட்டியில் தன்னுடைய கேப்டன்சி திறமையை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றி பெற வைப்பாரா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து ஆட்டத்தை கண்டு வருகின்றனர்.