“விராட் கோலி அதிர்ஷ்டம் இல்லாதவர்.. ஆனா இந்த இந்திய வீரருக்கு பொறுப்பில்ல!” – சல்மான் பட் விமர்சனம்!

0
636
Butt

13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை நடத்திய இந்தியாவின் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இது உலக கோப்பையை இறுதிவரை இந்திய கிரிக்கெட் ரசிகர்களை தொடர வைத்தது.

மேலும் இந்திய அணி ஒரு போட்டியை கூட தோற்காமல் இந்த உலகக்கோப்பையில் இறுதி போட்டியை எட்டிய காரணத்தினால், ரசிகர்கள் மிகவும் நம்பிக்கையோடு போட்டியை காண்பதற்கு காத்திருந்தார்கள்.

- Advertisement -

இப்படியான நிலையில் இந்திய அணி டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்து யாரும் எதிர்பார்க்காத விதத்தில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இதில் முதல் 10 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட் இழப்புக்கு இந்தியா 80 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி ஒரு கட்டத்தில் நெருக்கடியில் சிக்கிய பொழுது கே எல் ராகுலை வைத்துக் கொண்டு விராட் கோலி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் ஆட்டம் இழந்ததும் இந்திய அணிக்கு எல்லாம் அந்த இடத்திலேயே முடிய ஆரம்பித்துவிட்டது.

ஓரளவுக்கு கேஎல்.ராகுல் ஆட்டத்தை இழுத்துக் கொண்டு வந்தாலும் அவரும் அடித்து விளையாட வேண்டிய நேரத்தில் விக்கெட்டை இழந்தார். மேலும் கடைசி வரை களத்தில் நின்று விளையாட முயற்சி செய்த சூரியக்குமார் யாதவ், இறுதி நேரத்தில் அதிரடியாக 25 ரன்களையாவது கொண்டு வருவார் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் சூரியகுமார் யாதவ் மீண்டும் ஏமாற்றினார்.

- Advertisement -

இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கூறும்பொழுது “சூரியகுமார் யாதவ் என்ன செய்ய முயற்சி செய்தார் என்பதே எனக்கு புரியவில்லை. அவர் கடைசி கட்ட பேட்ஸ்மேன் களுடன் இணைந்து விளையாடிய பொழுது, அவர் தன்னுடைய ஷாட்களை விளையாட வேண்டி இருந்தது. ஆனால் அவர் ஒரு ரன் எடுத்து கடைசிக்கட்ட பேட்ஸ்மேன்களை விளையாட விட்டார்.

மேலும் ஆஸ்திரேலியா பந்துவீச்சின் இறுதி நேரத்தில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. ஆனாலும் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் பும்ரா இல்லை சமி போன்றவர்கள் கிடையாது. அப்படி இருந்தும் சூரியகுமார் யாதவால் அவர்களை விளையாட முடியவில்லை.

விராட் கோலி துரதிஷ்டவசமானவர். அவர் பேட்டிங்கில் சிறப்பாக இருந்தார். மேலும் அவரும் ராகுலும் இன்னும் பத்து ஓவர்கள் பேட்டிங் செய்திருந்தால் இந்திய அணியை சிறப்பான இடத்திற்கு கொண்டு வந்திருப்பார்கள்.

இருப்பினும் ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக முக்கியமான நேரங்களில் இந்திய விக்கெட்டுகளை தொடர்ந்து கைப்பற்றினார்கள். அவர்கள் இந்தியாவை ஒரு சரியான பார்ட்னர்ஷிப்பை அமைக்க எந்த இடத்திலுமே விடவில்லை. இதுதான் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது!” என்று கூறி இருக்கிறார்!