சச்சின் இருக்கும் போதே விராட் கோலி மாஸ்தான்.. இந்த இன்னிங்ஸ் போதும் – ஆஸி லெஜன்ட் கிரேக் சேப்பல் கட்டுரை!

0
563
Sachin

உலகக் கிரிக்கெட்டில் 90களின் பிற்பகுதியில் இந்திய அணி எந்த இடத்தில் இருந்தாலும், இந்திய அணியின் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனித்துவமான வீரராகத் திகழ்ந்தார்!

அவர் விளையாடிய காலக்கட்டத்தில் ராகுல் டிராவிட், லட்சுமணன், கங்குலி, வீரேந்திர சேவாக் என்று பெரிய வீரர்கள் யார் இருந்தாலும், அவர்களால் சச்சின் இடத்தை கொஞ்சம் கூட பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அந்த அளவிற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஒருதலைப் பட்சமாக சச்சின் பக்கமாகவே இருந்தார்கள்!

- Advertisement -

இதற்கு அடுத்து மகேந்திர சிங் தோனி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகுதான், இந்திய அணி மெல்ல மெல்ல தனிநபரை சார்ந்து இல்லாமல் மாறியது. சச்சின் ஆட்டம் இழந்தாலும், அது அணியின் வெற்றியை பெரிய அளவில் பாதிக்காது என்ற நிலைமை உருவானது. பாட்டியின் கீழ் வரிசையில் யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி மிகப்பெரிய தாக்கத்தை கொடுப்பவர்களாக, ஆட்டத்தை முடிப்பவர்கள் ஆக இருந்தார்கள்.

சச்சின் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இன்று சச்சினுக்கு நிகராக புகழ்பெற்று இருக்கும் விராட் கோலியின் அறிமுகம் இந்திய கிரிக்கெட்டில் நடந்தது. இரண்டு ஜாம்பவான்களும் ஒரே நேரத்தில் ஒரே அணியில் இடம் பெற்று விளையாடினார்கள்.

தற்பொழுது இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் பழம்பெரும் வீரர் இயன் சேப்பல் எழுதும்போது “2012 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை தொடர்ந்து கொண்டிருந்த பொழுது, பெர்த் மைதானத்தில் விராட் கோலி நம்பிக்கை ஊட்டும் விதமாக இரண்டு இன்னிங்ஸ்களிலும் 44 மற்றும் 75 ரன்கள் எடுத்தார். ஒரு நல்ல ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு எதிராக அவரது பேட்டிங் திறமை வெளிப்பட்டது. அடுத்து அடிலைடில் ஒரு சிறந்த சதத்துடன் தொடர்ந்தார். அந்தப் போட்டியில் அவரைச் சுற்றி இருந்த அனைவரும் தோல்வி அடைந்தார்கள். இந்தியாவிற்கு அடுத்த சிறப்பான பேட்ஸ்மேனாக அவர் இருப்பார் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

- Advertisement -

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று வந்த விராட் கோலி இரண்டு சதங்களை விளாசினார். விராட் கோலி இரண்டாவது இன்னிங்ஸில் அடித்த 141 ரன்கள் மிகவும் சிறப்பானது. சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான அந்த ஆடுகளத்தில் அது ஒரு தலைசிறந்த படைப்பாகும். அவரது அணி இன்னும் கொஞ்சம் உதவி இருந்தால் அந்தப் போட்டியில் மறக்க முடியாத ஒரு வெற்றி கிடைத்திருக்கும்.

விராட் கோலியின் அற்புதமான சாதனைகள் மற்றும் அவரது சிறப்பான தலைமைத்துவம் இருந்தாலும், 2014 ஆம் ஆண்டு அடிலைடில் நடந்த டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் அடித்த சதம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அவரது திறமையைக் காட்டியது. விராட் கோலி ஒரு பேட்டராக, ஒரு கேப்டனாக பல விதிவிலக்கான சாதனைகளுக்கு நினைவுகூரப்படுவார். ஆனால் அடிலைடில் நடந்த டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் விளையாடிய விதம், குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் அவர் விளையாடியது அவர் திறமை என்னவென்று இந்த உலகத்திற்கு காட்டியது!” என்று கூறியிருக்கிறார்!