இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்தியாவின் முன்னணி வீரர் விராட் கோலியை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய “மிகச் சிறந்த” பேட்ஸ்மேன்களில் ஒருவராக புகழ்ந்துள்ளார். கோலி, மே 12 அன்று சமூக வலைதளங்கள் மூலம் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
இது குறித்து பேசிய ஆண்டர்சன், கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் ஓய்வுக்குப் பிறகு, அவர்களின் இடத்தை நிரப்பக்கூடிய அபரிமிதமான திறமையான படையை இந்தியா கொண்டிருப்பதாக கூறினார். இங்கிலாந்து ஜாம்பவானான ஆண்டர்சனுக்கு எதிராக கோலி, 36 இன்னிங்ஸ்களில் 43.57 என்ற சராசரியுடன் 305 ரன்கள் குவித்தார்.மேலும் ஆண்டர்சனின் பந்துவீச்சில் ஏழு முறை ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து பேசிய ஆண்டர்சன், சிறந்த வீரர்கள். புதிய கேப்டன் வருவார், ஏனெனில் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுவிட்டார். கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை இருந்த மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அவர்களின் இடத்தை நிரப்புவது பெரிய பொறுப்பு, ஆனால் இந்திய அணியில் அபரிமிதமான திறமை உள்ளது. ஐபிஎல் போட்டிகளைப் பார்த்தாலே தெரியும்.
இப்போது ஐபிஎல்லில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஆக்ரோஷமாகவும், பயமின்றியும் விளையாடும் வீரர்களை அவர்கள் கொண்டு வருகின்றனர்,” என்று ஆண்டர்சன் கூறினார்.இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸில் தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 42 வயதான ஆண்டர்சன், இந்திய அணி இம்முறையும் இங்கிலாந்து வீரர்களுக்கு கடினமான சவாலாக இருக்கும் என ஒப்புக்கொண்டார்.
மேலும், ஆஷஸ் தொடர் நெருங்கி வருவதால், அணிக்குள் உத்வேகத்தை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“ஆஷஸ் தொடர் வரவுள்ளதால் இது மிக முக்கியமான ஆண்டு. ஆனால், உத்வேகத்தை உருவாக்குவது முக்கியம். நேர்மையாகச் சொல்வதானால், எனது கிரிக்கெட் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, ஆஷஸ் தொடருக்கு 18 மாதங்கள் முன்பாகவே நிர்வாகமும் வீரர்களும் அதை நோக்கி கவனம் செலுத்தத் தொடங்கிவிடுவார்கள்.
இதையும் படிங்க: விராட் கோலிக்கு பயிற்சி போட்டி பிடிக்காது.. அதுக்கு மாஸான முக்கிய காரணம் இதுதான் – முன்னாள் கோச் பரத் அருண் பேட்டி
முன்னால் உள்ளவற்றை மறந்துவிடுவார்கள்
இந்திய அணி, சொந்த மண்ணில் விளையாடினாலும் கடினமான சவாலாக இருக்கும். அவர்கள் வலுவான அணி,” என்று கூறினார். கோலி, ரோகித் இல்லாத நிலையில் ரஜத் பட்டிதார், சர்பிராஸ் கான், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.