விராட் கோலிக்கு பயிற்சி போட்டி பிடிக்காது.. அதுக்கு மாஸான முக்கிய காரணம் இதுதான் – முன்னாள் கோச் பரத் அருண் பேட்டி

0
102
Arun

இந்திய அணிக்கு முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த பரத் அருண் விராட் கோலி பயிற்சி போட்டிகளை ஏன் விரும்ப மாட்டார்? அவர் ஓய்வு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எவ்வளவு பெரிய இழப்பு? என்பது குறித்து பேசி இருக்கிறார்.

விராட் கோலி கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து பல முன்னாள் நட்சத்திர வீரர்கள் அவர் ஓய்வு பெறுவது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என்றும் அவர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும் இப்பொழுது வரை கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விராட் முடிவு சரியா?

இந்த நிலையில் தற்பொழுது பேசியிருக்கும் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருப்பது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பின்னடைவாக அமையும் என்று கூறி இருக்கிறார். மேலும் ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை உயர்த்திய போது இவர் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பரத் அருண் பேசும் பொழுது “இந்தியா மற்றும் உலக டெஸ்ட் கிரிக்கெட் அவரையும் அவருடைய ஆளுமையையும் நிச்சயம் தவறவிட போகிறது. இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சி பயிற்சியாளராக நான் விராட் கோலி உடன் பல அற்புதமான தருணங்களில் இருந்திருக்கிறேன்”

- Advertisement -

பயிற்சி போட்டியை விரும்பாத விராட்

“விராட் கோலி பயிற்சி போட்டிகளை எப்பொழுதும் விரும்பாதவராக இருந்தார். காரணம் பயிற்சி போட்டியை விளையாடும் பொழுது அதில் தீவிரம் இருக்காது என்று அவர் எப்பொழுதும் நம்பினார். இதன் காரணமாக அவர் வலைகளில் பயிற்சி செய்யத்தான் அதிகம் விரும்புவார். மேலும் அவர் பயிற்சி செய்வதற்கு நல்ல வேகமான ஆடுகளங்கள் வேண்டும். மேலும் 22 யார்டுக்கு பதிலாக 16 யார்டில் பந்துவீச சொல்லுவார். இந்த அளவிற்கு அவரது பயிற்சி தீவிரமாக இருக்கும்”

இதையும் படிங்க : 2011-ல தோனி செஞ்ச அதே தப்பு.. இப்ப 2 பேரால இந்திய டீம் சிதைய போகுது.. – யோக்ராஜ் சிங் பேட்டி

“நாங்கள் முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்த பொழுது விராட் கோலி அற்புதமான முறையில் பெர்த் டெஸ்டில் ஒரு சதம் அடிப்பார். ஆனால் நாங்கள் அந்த போட்டியில் வெல்லவில்லை. மெல்போர்னுக்கு சென்றதும் உண்மையில் ஓய்வு அறையின் மனநிலையை மாற்றியது விராட் கோலிதான். நம்மால் வெற்றி பெற முடியும் என்று மனநிலையை மாற்றி அமைத்து தனது தொழிலை சிறப்பாக செய்தார். அவர் எல்லாவற்றையும் விட டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் நேசித்தார். இப்பொழுது நாம் அவரை தவற விடப் போகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -