விராட் கோலி மீண்டும் இந்திய டெஸ்ட் கேப்டன்?.. ரோகித் தொடர்ந்து செய்யும் தவறு.. பரபரப்பான களம்!

0
341
Virat

ரோகித் சர்மா தலைமையில் இந்திய டெஸ்ட் அணி முதல்முறையாக எஸ்இஎன்ஏ நாடுகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதற்கு அடுத்து இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

- Advertisement -

டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மாவின் திட்டங்கள் களத்தில் மிகவும் சுமாராக இருப்பதாக கருதப்படுகிறது. குறிப்பாக இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி பெரிய சதம் அடித்த டீன் எல்கருக்கு ஷார்ட் பந்து வியூகத்தை ரோகித் சர்மா பயன்படுத்தவில்லை. மேலும் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு முக்கிய பந்துவீச்சாளர்களை வைத்து துவங்கவில்லை.

இதே மாதிரியான தவறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டிராவிஸ் ஹெட் க்கு எதிராகவும் கேப்டனாக ரோகித் சர்மா செய்தார். சாட் பந்தில் பலவீனமான டிராவீஸ் ஹெட்டுக்கு, அந்த நேரத்தில் அவர் 80 ரண்களைத் தாண்டிய பிறகு, அப்படியான பந்துகளை வீச வைத்தார்.

வெள்ளை பந்து போட்டிகளில் குறிப்பிட்ட ஓவர்கள் வீசி முடித்தால் போதும் என்பதால், அதனுடைய திட்டங்கள் மற்றும் கள வியூகங்கள் வேறு மாறியாக இருக்கும். ஆனால் ரன் தேவை அதிகம் இல்லாத டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டை கைப்பற்ற மிகுந்த பொறுமையும், சிறப்பான திட்டம் மற்றும் வியூகங்கள் தேவைப்படும். இதில் ரோகித் சர்மா கேப்டனாக பின்தங்கியே இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் தான் மீண்டும் விராட் கோலி இந்திய டெஸ்ட் கேப்டனாக வரவேண்டும் என்கின்ற குரல்கள் இந்திய கிரிக்கெட் தாண்டி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. குறிப்பிட்ட நான்கு வருடங்கள் விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்த வேண்டும் என்றும் கேட்கப்படுகிறது.

அதே சமயத்தில் இந்திய டெஸ்ட் கேப்டனாக அவரே மிக வெற்றிகரமானவராக இருக்கிறார். வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டியை மட்டும் இல்லாமல் தொடரையும் கைப்பற்ற முடிந்த கேப்டனாக அவர் ஒருவரே இருந்தார். களத்தில் பந்துவீச்சாளர்களை ஊக்குவித்து, சிறப்பான திட்டங்களை வகுத்து விக்கெட்டை வீழ்த்த கேப்டனாக அவர் எப்பொழுதும் துடிப்புடன் இருக்கக்கூடியவர். அவருடைய இந்தப் பண்பு ரோகித் சர்மாவுக்கு குறைவாக இருக்கிறது. எனது தற்பொழுது ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது!