இந்திய அணியின் மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணியின் தூண்களாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் மேற்கொண்டு அவர்கள் எவ்வளவு காலம் இந்திய அணிக்கு கிரிக்கெட் விளையாட முடியும் என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார்.
தற்போது இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு 37 வயது ஆகிறது. மேலும் விராட் கோலிக்கு 35 வயது ஆகிறது. ரோகித் சர்மா இன்னும் நான்கு ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் விளையாடி சவுத் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் 2027 ஆம் ஆண்டு விளையாடுவார் என்று உறுதியாக கூற முடியாது.
அதே சமயத்தில் விராட் கோலியின் உடல் தகுதி கிரிக்கெட் வீரர்களுக்கு தேவையான உடல் தகுதியை விட அதிகமாக இருக்கிறது. இதுவரையில் அவர் உடல் தகுதியில் தடுமாறி களத்தில் யாரும் பார்த்தது கிடையாது. எனவே அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் 2027 ஆம் ஆண்டு வரையில் விளையாட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் ஹர்பஜன்சிங் கூறும் பொழுது “ரோகித் சர்மாவால் இன்னும் இரண்டு ஆண்டுகள் எளிதாக விளையாட முடியும். விராட் கோலியின் உடல் தகுதி அபாரமான முறையில் இருக்கும். அவரால் இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாட முடியும். அவர்தான் தற்போதைய இந்திய அணியில் மிகவும் பிட் ஆன வீரராக இருப்பார். இந்திய அணியில் இருக்கும் 19 வயது பையனால் அவருடன் உடல் தகுதியில் போட்டியிட முடியாது.
அப்படி போட்டியிட்டால் விராட் கோலி அந்த பையனை வீழ்த்தி விடுவார். அந்த அளவிற்கு விராட் கோலி பிட்டாக இருக்கிறார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருக்குமே இன்னும் நிறைய கிரிக்கெட் என்று இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. ஆனால் இது அவர்களின் தனிப்பட்ட முடிவை பொருத்தது. மேலும் அணி வெற்றி பெறும் வரையில் அவர்கள் தொடர்ந்து இந்திய அணிக்கு விளையாட வேண்டும்.
இதையும் படிங்க : இவங்க 2 இந்திய பவுலரும் சேர்ந்து வந்தா.. எந்த பேட்ஸ்மேனாலும் நிக்க முடியாது – இந்திய முன்னாள் பவுலிங் கோச் சவால்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர்களுடைய தேவை மக்கள் எதிர்பார்ப்பதை விட இன்னும் அதிகமாக இருக்கிறது. அதே சமயத்தில் உங்களுக்கு எல்லா வகையான கிரிக்கெட் வடிவத்திலும் அனுபவம் தேவை.அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருக்கும் பொழுதுதான் இளம் வீரர்களை அணிக்குள் வளர்க்க முடியும்” என்று கூறி இருக்கிறார்.






