இவங்க 2 இந்திய பவுலரும் சேர்ந்து வந்தா.. எந்த பேட்ஸ்மேனாலும் நிக்க முடியாது – இந்திய முன்னாள் பவுலிங் கோச் சவால்

0
710
Mhambrey

இந்திய அணியின் தலைமை பேச்சாளர் பதவியில் ராகுல் டிராவிட் இருந்த பொழுது பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தவர் பராஸ் மஹாம்ப்ரே. தற்போது இவர் புதிய பந்தில் உலகில் மிக ஆபத்தான பந்துவீச்சாளர்கள் யார் என்பது குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்.

ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்த பொழுது பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த பராஸ் மஹாம்ப்ரே மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த விக்ரம் ரத்தோர் இருவருக்கும் பயிற்சி காலம் நீட்டிக்கப்படவில்லை. கம்பீர் தனக்கு புதிய பயிற்சியாளர் குழுவை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் முன்னாள் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளரான பராஸ் மஹாம்ப்ரே புதிய பந்தியில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சமி இருவரும் சேர்ந்து பந்து வீசும் பொழுது உலகில் எந்த பேட்ஸ்மேன்களும் தடுமாறுவார்கள் என்றும், இவர்கள் புதிய பந்தில் அழிவுகரமான பந்துவீச்சாளர்கள் எனவும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து விரிவாக பேசி இருக்கும் பராஸ் மஹாம்ப்ரே ” பும்ரா மற்றும் சமி இருவரும்தான் புதிய பந்தில் நீங்கள் பெறக்கூடிய மிகச்சிறந்த காம்பினேஷன் என நான் நினைக்கிறேன். இவர்கள் இருவரும் பேட்ஸ்மேன்களுக்கு மிக மோசமான விளைவுகளை உருவாக்குவார்கள். பும்ரா வெளிப்படையாகவே வித்தியாசமான பந்துவீச்சாளர்.

- Advertisement -

சமி அப்ரைட் சீம் பந்துவீச்சாளர்.அந்த நிலையில் அவர் பந்தை தர இறக்குவதுதான் அவருடைய பலம் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் பந்து தையலில் தரையில் படுவதால் உள்ளே செல்கிறதா அல்லது வெளியே செல்கிறதா? என்று பேட்ஸ்மேனுக்கு தெரியாது.

பும்ரா குறைவான தூரத்தில் இருந்து ஓடி வருகிறார், அவரிடம் வித்தியாசமான பந்துவீச்சு ஆக்சன் இருக்கிறது. மேலும் ஆடுகளத்தை புரிந்து கொள்ளக் கூடியவர். சிறந்த யார்க்கரை வீசுவார். இத்தோடு அவருக்கு பந்துவீச்சில் நல்ல வேகமும் இருக்கிறது.

இதையும் படிங்க : அவசரப்படாதிங்க.. கம்பீர் இந்த விஷயத்துல பெரிய மாஸ்டர்.. இதை நிச்சயம் செய்வார் – ராபின் உத்தப்பா கருத்து

இப்படி இரண்டு வகையான வேகப்பந்துவீச்சாளரை நீங்கள் ஒரே நேரத்தில் பந்து வீச அனுப்பும் பொழுது, பேட்ஸ்மேனுக்கு பந்துவீச்சு குறித்து எப்பொழுதும் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். எனவே இந்த ஜோடியை எதிர்கொண்டு விளையாடுவது என்பது உலகில் எந்த பேட்ஸ்மேனுக்கும் மிகவும் கடினமான ஒன்று” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -