சச்சின் டெண்டுல்கர் இல்லை; கிரிக்கெட்டோட மாஸ்டர்னா அது விராட் கோலி தான் – கம்பீர் கொடுத்த ஷாக் பேட்டி!

0
188

50 ஒவர் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளின் மாஸ்டர் விராட் கோலி என்று பெருமிதமாக பேசியுள்ளார் கௌதம் கம்பீர்.

பார்டர் கவாஸ்கர் டிராபியில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 44 ரன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 20 ரன்கள் என அடித்து விராத் கோலி ஆட்டம் இழந்தார். இவர் அடித்த ஸ்கோர்கள் குறைவாக இருந்தாலும் மிக முக்கியமான கட்டத்தில் வந்தவை.

- Advertisement -

குறிப்பாக, இரண்டாவது இன்னிங்சில் 20 ரன்கள் அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 25, 000 ரன்கள் கடந்துள்ளார். அதிவிரைவாக 25, 000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

சச்சின் டெண்டுல்கர் 577 இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்திருந்தார். தற்போது விராட் கோலி அதனை முறியடித்து, 549 இன்னிங்ஸில் படைத்திருக்கிறார். இந்த சாதனையை கேட்டதும் இதற்கு கெளதம் கம்பீர் தனது கருத்தை தெரிவித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

“சாதனை பட்டியலை பார்க்கவில்லை. விராட் கோலி சாதனை படைத்தார் என்று கேள்விப்பட்டேன். மற்ற வீரர்களை விட விராட் கோலியிடம் இருக்கும் சாதனை என்னவென்றால், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் என அனைத்து நாடுகளிலும் சதம் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் தென்னாப்பிரிக்கா வீரர்கள், ஆஸ்திரேலியா வீரர்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் இந்திய துணைக்கண்டங்களில் எவ்வளவு சதங்கள் அடித்திருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

- Advertisement -

50 ஓவர்கள் போட்டியில் விராட் கோலி ஒரு மாஸ்டர். டெஸ்ட் போட்டிகளிலும் 28 சதங்கள் 27 அரை சதங்கள் அடித்திருக்கிறார். ஒட்டுமொத்த கிரிக்கெட்டின் மாஸ்டர் என்று இவரை கூறலாம். இதற்கு மேல் அவர் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?.

25 ஆயிரம் ரன்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒவ்வொரு வீரருக்கும் கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும், டெக்னிக்கில் மாற்றங்கள் செய்ய நேரிடும், நிற்கும் பொசிஷனில் மாற்றங்கள் செய்ய நேரிடும், நன்றாக விளையாடி வந்த சாட்டுகலுக்கு ஆட்டமிழக்க நேரிடலாம், பல்வேறு மாற்றங்களை ஆட்டத்தில் கொண்டுவர நேரிடலாம். இவை அனைத்தையும் கட்டுக்குள் வைத்து விராட் கோலி இவ்வளவு பெரிய சாதனையை படைத்திருப்பது எளிதானதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதை விரைவாகவும் செய்து காட்டியிருப்பது மாஸ்டர் என்பதை உணர்த்துகிறது.” என்றார்.