விராட் கோலி பலருக்கு ஹீரோ; அவர் விக்கெட்டை எடுத்தது எப்பவும் இருக்கும் – ஆஸ்திரேலியா இளம் பந்துவீச்சாளர் பெருமை!

0
267
Murpy

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று ஆரம்பித்து நடைபெற்று வருகிறது!

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியில் சுழற் பந்துவீச்சாளர் நாதன் லயன் இருக்க, அவரைப்போலவே சுழப்பந்து வீசும் 22 வயது டாட் மர்பி அறிமுகமாகச் சேர்க்கப்பட்டது மிகப்பெரிய ஆச்சரியங்களை, விவாதங்களை உருவாக்கியது.

- Advertisement -

ஆனால் அவரது செயல்பாடு அனைத்து விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. நேற்றும் இன்றும் மொத்தம் 36 ஓவர்கள் வீசிய அவர் அதில் ஒன்பது மெய்டன்கள் செய்து 82 ரன்கள் விட்டுத்தந்து ஐந்து விக்கெட்டுகளை அறிமுக போட்டியிலேயே எடுத்து அசத்தினார். இந்த ஐந்து விக்கட்டில் விராட் கோலியின் விக்கட்டும் அடக்கம்.

விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சி பற்றி பேசிய அவர்
” விராட் கோலி அவுட் ஆன அந்த பந்து என்னுடைய சிறந்த பந்து கிடையாது. ஆனால் அவரது விக்கட்டை கைப்பற்றியது என் கனவு நனவாண தருணம். அவரை நான் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். அவர் பலருக்கு கதாநாயகன். இன்றைய நாளை ஐந்து விக்கட்டுகள் எடுத்து முடிவு செய்தது மகிழ்ச்சி. எல்லாமே மிக வேகமாக நடந்திருக்கின்றன!” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நான் எனது உடல் மொழியை எப்பொழுதும் அடக்கமாக அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறேன். அதே சமயத்தில் நான் என்னை நம்புகிறேன். என்னிடம் பலரும் சொன்னது நான் மாநில கிரிக்கெட்டில் செய்த எதையும் மாற்ற வேண்டாம் என்பதுதான். நான் ஜடேஜா அஸ்வின் அக்சர் மூன்று பேரையும் பார்த்தேன். அவர்கள் செய்வதை தொடர்ந்து செய்தார்கள் புதிதாக எதையும் முயற்சி செய்யவில்லை. நானும் அதேபோல் கேள்விகளுக்கு விடை தெரியும் வரை தொடர்ந்து ஒரே இடத்தில் வீசினேன்” என்று கூறியுள்ளார்!

- Advertisement -