கோலி ஒரு மாஸ் ஐபிஎல் சாதனை.. ஒரு மெகா உலக சாதனை.. கேகேஆர்-க்கு எதிராக ஆர்சிபி ரன் குவிப்பு

0
385
Virat

இன்று ஐபிஎல் தொடரில் பத்தாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொள்ளும் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. ஆர் சி பி அணிக்கு இது மூன்றாவது போட்டி கேகேஆர் அணிக்கு இது இரண்டாவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது..

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.ஆர்சிபி அணியின் கேப்டன் பாப் டு பிளிசிஸ் இந்த போட்டியிலும் ஏமாற்றம் தந்தார். 6 பந்துகளை எதிர் கொண்ட அவர் 8 ரன்கள் மட்டும் எடுத்து ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். மூன்றாவது இடத்தில் வந்த கேமரூன் கிரீன் கொஞ்சம் அதிரடியாக விளையாடி நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து பெரிய எதிர்பார்ப்புடன் வந்த மேக்ஸ்வெல் இரண்டு எளிமையான கேட்ச் வாய்ப்புகளை தந்தார். அதை ரமன்தீப் சிங் மற்றும் சுனில் நரைன் இருவரும் கோட்டை விட்டார்கள். இதற்கு அடுத்து மூன்றாவதாகவும் ஒரு கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். இந்த முறை ரிங்கு சிங் தவறாமல் கேட்ச் பிடித்தார். மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இவர்களுக்கு நடுவில் மிகவும் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 36 பந்துகளில் தன்னுடைய அரைசதத்தை பூர்த்தி செய்தார். அரைசதத்தை எட்டுவதற்கு வருண் சக்கரவர்த்தி பந்தில் ஒரு சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் 240 சிக்ஸர்கள் ஆர்சிபி அணிக்கு அடித்து, ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் ஆர்சிபி அணிக்காக 239 மற்றும் 238 சிக்ஸர்கள் அடித்து கெயில் மற்றும் டிவிலியர்ஸ் இருவரும் இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் தற்பொழுது விராட் கோலி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் எல்லாவிதமான போட்டிகளிலும் சேர்த்து 3244 ரன்கள் எடுத்து, ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்கின்ற உலக சாதனையை படைத்தார். இதற்கு அடுத்த இடத்தில் முஸ்பிகியூர் ரஹீம் மிர்பூர் மைதானத்தில் 3249 ரன்கள், ஹோல்க்ஸ் இங்கிலாந்து நாட்டிங்ஹாம் மைதானத்தில் 3036 ரன்கள் எடுத்து மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க : ஹர்திக் கொஞ்சமாவது உங்க ப்ளேயர்ஸை பத்தி யோசிங்க.. இந்தியாவில் இதான் முதல் முறை – ஸ்மித் பேட்டி

20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்திருக்கிறது. ரஜத் பட்டிதார் 3, அனுஜ் ராவத் 3, தினேஷ் கார்த்திக் 20(8) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இறுதிவரை ஆட்டம் இழக்காத விராட் கோலி 58 பந்தில் நான்கு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 83 ரன்கள் எடுத்தார். ஹர்ஷித் ராணா மற்றும் ரசல் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -