உங்க கேப்டன்சியில் ஒரு மாதிரி.. ரோகித் கேப்டன்ஷியில் வேற மாதிரி விளையாட்றீங்களா? விராட் கோலியின் தரமான பதில்

0
4894

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி இன்று வெற்றி பெற வேண்டும் என்றால் 280 ரன்கள் அடிக்க வேண்டும். தற்போது களத்தில் விராட் கோலியும் , ரஹானேவும் இருக்கிறார்கள்.

இந்த ஜோடியை நம்பியே இந்திய அணி இருக்கிறது. இந்த நிலையில் தாம் கேப்டனாக இருக்கும்போதும் வேறொருவர் கேப்டன் ஆக இருக்கும்போது அவருக்கு கீழ் விளையாடும் போதும் விராட் கோலி வேறு மாதிரி விளையாடுவதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

- Advertisement -

இது குறித்து  விராட் கோலி தக்க பதில் அளித்துள்ளார். அதனை தற்போது பார்க்கலாம். நான் காலையில் எழுந்திருக்கும் போதே அணியின் வெற்றிக்கு நான் பெரிய பங்கை ஆற்றுவேன் என்ற நம்பிக்கையோடு தான் எழுவேன். என் நாட்டுக்காக விளையாடுவது எனக்கு இருக்கும் பெரிய ஊக்கம்.

மனதளவில் நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கின்றேன். என் கிரிக்கெட் வாழ்க்கையிலும் சரி ஆடுகளத்தின் வெளியிலும் சரி சில விஷயங்கள் சிறப்பான முறையில் நடந்து இருக்கிறது. தற்போது என் வாழ்நாளில் அனைத்து கிரிக்கெட் ஃபார்மட்டிலும் சிறப்பான முறையில் விளையாடுவதாக நான் நம்புகிறேன்.

என் நாட்டுக்காக விளையாடுவதை நினைத்து பெருமை கொள்கிறேன். என்னுடைய அணி வெற்றி பெறும் தருவாயில் இருக்கும் போது அதைவிட எனக்கு சிறந்த சந்தோஷம் கிடையாது. நாட்டிற்காக விளையாடுவதை தவிர வேறு என்ன ஊக்கம் நமக்கு கிடைத்து விடப் போகிறது.

- Advertisement -

தோனியின் கேப்டன்சிக்கு கீழ் விளையாடியதாக இருந்தாலும் சரி நான் கேப்டனாக இருக்கும்போது விளையாடியதாக இருந்தாலும் சரி தற்போது ரோகித் சர்மாவின் கேப்டன்ஸியில் விளையாடியதாக இருந்தாலும் சரி என்னுடைய பணி எப்போதுமே ஒன்றுதான்.

அது என்னுடைய அணிக்காக நான் வெற்றியை பெற்று தர வேண்டும். அப்படி செய்யும் போது அதிலிருந்து நான் மிகப் பெருமையாக நினைக்கின்றேன் என்று விராட் கோலி பேசி இருக்கிறார். இதன் மூலம் தான் கேப்டனாக இருந்தாலும் சரி இல்லை வேறு ஒருவருக்கு விளையாடினாலும் சரி அணியின் வெற்றி தான் எனக்கு முக்கியம் என்று விமர்சனங்களுக்கு விராட் கோலி தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.

விராட் கோலி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022 செப்டம்பர் மாதம் வரை சர்வதேச கிரிக்கெட்டில் சதமே அடிக்காத நிலையில் தற்போது தான் அவர் அடுத்தடுத்து சதங்களை குவித்து அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி அடுத்தடுத்து சதம் அடிக்கும் நேரத்தில் ரோகித் சர்மா தான் கேப்டனாக இருந்தார் என்பது கவனிக்க வேண்டியது ஆகும்.