இன்று இலங்கை கொழும்பு மைதானத்தில் இந்தியா இலங்கை அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் மோதி வருகின்றன. இந்த போட்டியில் விராட் கோலியை மையமாகக் கொண்ட ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்திருக்கிறது.
டி20 உலகக்கோப்பையை தொடரை வென்ற பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இலங்கைக்கு எதிரான இந்த தொடருக்கு திரும்பி இருக்கிறார்கள். இவர்களுடன் முதல்முறையாக தலைமை பயிற்சியாளர் கம்பீர் இணைந்திருக்கிறார். எனவே இந்த தொடருக்கு ரசிகர்களிடையே நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யும் என ஆவலாக எதிர்பார்த்த நிலையில், இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். 50 ஓவர்கள் இந்திய அணி பேட்டிங் செய்வதை பார்க்க நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் உண்டானது.
மேலும் இலங்கை அணியில் டி20 தொடரின் போது மூன்று நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்கள் காயத்தால் வழங்கினார்கள். ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கும் பொழுது மதிஷா பத்திரனா மற்றும் மதுசங்கா என இரண்டு நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்கள் விலகி இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களது பவுலிங் யூனிட் மிகவும் பலவீனமாக உள்ளது.
இந்த நிலையில் இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் 16 இலங்கை வீரர்களும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 12,885 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். அதே சமயத்தில் விராட் கோலி 13,848 ரன்கள் எடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒட்டு மொத்த இலங்கை அணியை விட ஆயிரம் ரன்களுக்கும் பக்கம் அதிகம் எடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க : 16 பவுண்டரி.. 3 ரன்னில் சோகம்.. இங்கிலாந்தில் ஜொலித்த பிரித்வி ஷா.. ஒரு நாள் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் அசத்தல்
மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 292 போட்டிகளில் 280 இன்னிங்ஸ்களில் 44 முறை நாட் அவுட் ஆக இருந்து 13,848 ரன்கள் எடுத்திருக்கிறார். அதிகபட்சமாக 183 ரன்கள் ஒரு போட்டியில் அடித்திருக்கிறார். மேலும் இவருடைய ஆவரேஜ் 58.67 என பிரம்மாண்டமாக இருக்கிறது. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதம் மற்றும் 72 அரை சதங்கள் நடித்திருக்கிறார். இதையும் ஒட்டுமொத்த இலங்கை அணியால் எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.