இங்கிலாந்தில் தற்போது ராயல் ஒன் டே கப் கவுண்டி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் நார்த்தாம்டன்ஷிர் மற்றும் தர்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியில் நார்த்தாம்டன்ஷிர் அணி வீரர் பிரத்விஷா சிறப்பாக விளையாடி இருக்கிறார்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியாக விளையாடி நார்த்தாம்டன்ஷிர் அணிக்கு சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் லீக் கிரிக்கெட் தொடரான ராயல் ஒன் டே கப் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தமாக இந்தத் தொடரில் 18 அணிகள் பங்கேற்று வரும் நிலையில் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குரூப் ஏ தொடரில் நார்த்தாம்டன்ஷிர் மற்றும் தர்கா கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நார்த்தாம்டன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதை அடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இந்தியாவின் ப்ரித்வி ஷா மற்றும் ரிக்கார்டு ஆகியோர் களமிறங்கினார்கள். சமீபத்தில் மோசமான செயல்பாடு காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட இளம் வீரரான பிரத்விஷா ஐபிஎல் தொடரிலும் இரண்டாவது பாதியிலேயே டெல்லி அணியில் இடம் பிடித்து விளையாடினார். இந்த நிலையில் தனது இழந்த பேட்டிங் ஃபாமை திரும்பவும் மீட்டெடுக்கும் முயற்சியில் தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் டொமஸ்டிக் லீக் போட்டியில் விளையாடி வருகிறார்.
நார்த்தாம்டன் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய பிரித்விஷா ஆரம்பம் முதலே தனது அதிரடியை வெளிப்படுத்தினார். மொத்தமாக 71 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 136.61 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி 97 ரன்கள் குவித்து 3 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்து எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ரிக்கார்ட் ஒன்பது ரன்னில் வெளியேறினார்.
அதற்குப் பிறகு களம் இறங்கிய ஜார்ஜ் பார்லெட் 34 ரன்கள், ராப் கியாக் 19 ரன்கள், ஸைப் ஜைப் 14 ரன்களுக்கு வெளியேறினார்கள். தற்போது நார்த்தாம்டன் அணி 32 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. இதில் தர்காம் அணியில் பாஸ் லீட் ஒரு விக்கெட்டும், பார்த்விக், ட்ரிசெல், அக்கர் மேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.
இதையும் படிங்க:இனி 50 நாளைக்கு எதுவுமே கிடையாது.. அதனால கோலி இத செஞ்சு தான் ஆகணும் – ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தல்
இந்திய வீரர் பிரத்விஷாவுக்கு இது ஒரு முக்கியமான இன்னிங்ஸ் ஆக பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் இந்திய அணியில் இவருக்கான கதவு சிறிதாவது திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரிலும் இவரது சிறந்த இன்னிங்ஸ் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.






