இந்திய கிரிக்கெட் டீமில் இருந்து முகமது ஷமி தொடர்ந்து விலக்கி வைக்கப்பட்டு வருவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கார் கேள்வி எழுப்பி, அவருக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டீமில் முகமது ஷமி சேர்க்கப்படாத நிலையில், தொடர்ந்து டொமஸ்டிக் போட்டிகளில் சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் அளித்தும் அவர் புறக்கணிக்கப்படுவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஜம்மு காஷ்மீர் டீம் வேகப்பந்து வீச்சாளர் ஆசிப் நபி போன்ற இளம் பிளேயர்களுக்கும் ரஞ்சி ட்ராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட பிறகு இந்திய டீமில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திலீப் வெங்சர்க்கார் பேசும்போது “நேர்மையாகச் சொல்வதானால் முகமது ஷமி ஏன் ஓரங்கட்டப்பட்டார் என்று எனக்குத் தெரியவில்லை, அவர் டொமஸ்டிக் மற்றும் இன்டர்நேஷனல் கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அவர் இந்திய டீமின் முக்கிய பகுதியாக இருக்க வேண்டும், மேலும் மேட்ச் ஃபிட்னஸ் பெற வீரர்கள் தொடர்ந்து மேட்ச்களில் பௌலிங் செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய திலீப் வெங்சர்க்கார் “நியூசிலாந்து தொடருக்கான டெஸ்ட் ஸ்குவாடில் ஷமி இருக்க வேண்டும், அதேபோல் ரஞ்சி ட்ராபியில் இரண்டு சீசன்களில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த ஆசிப் நபிக்கும் வாய்ப்பு தர வேண்டும். டொமஸ்டிக் போட்டிகளின் பெர்ஃபார்மன்ஸ் இந்திய டீம் செலக்ஷனுக்கு கிரைடீரியா இல்லை என்றால் ரஞ்சி ட்ராபி தொடரையே ரத்து செய்து விடுங்கள்” என்று கூறி இருக்கிறார்.






