விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.. உருக்கமாக வெளியிட்ட அறிக்கை.. ரசிகர்கள் சோகம்

0
165
Virat

இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். அவரது இந்த ஓய்வு முடிவு இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரிய சோகத்தில் தள்ளி இருக்கிறது.

விராட் கோலி 123 டெஸ்ட் போட்டிகளில் 210 இன்னிங்ஸ்கள் விளையாடி 46.85 ரன் ஆவரேஜில் 9230 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 30 சதங்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாயிரம் ரன்கள் எடுத்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

வாழ்க்கை பாடங்களை கற்றேன்

இன்று விராட் கோலி வெளியிட்டிருக்கும் ஓய்வு அறிக்கையில் “நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ப்ளூ பாக்கி அணிந்து 14 வருடங்கள் ஆகிறது. இந்த டெஸ்ட் கிரிக்கெட் வடிவம் என்னை எடுத்துச் சென்ற பயணத்தை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அது என்னை சோதித்தது அதுவே என்னை வடிவமைத்தது. நான் வாழ்க்கைக்கு எடுத்துச் செல்லும் பாடங்களையும் அதுவே கற்றுக் கொடுத்தது”

“வெள்ளை உடை உடன் விளையாடுவதில் ஆழமான தனிப்பட்ட ஒன்று இருக்கிறது. ஆழமான அரவணைப்பு, நீண்ட நாட்கள், வெளியில் யாரும் பார்க்காத முக்கியமான சில தருணங்கள் என்பது எப்பொழுதும் ஞாபகத்தில் உங்களுடன் இருக்கும்”

- Advertisement -

இது எனக்கு எளிதாக இல்லை

“இந்த வடிவ கிரிக்கெட்டில் இருந்து நான் விலகி செல்வது எனக்கு எளிதாக இல்லை. ஆனால் இந்த முடிவு சரியானதாக இருக்கிறது. என்னிடமிருந்த அனைத்தையும் நான் கொடுத்து விட்டேன். நான் எதிர்பார்த்ததை அது எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது”

இதையும் படிங்க : எங்க பையன்தான்.. ஆனா கேப்டனாக கில்லுக்கு தகுதியே இல்ல.. இந்த ஒரு விஷயம் போதும் – நவ்ஜோத் சிங் சித்து விமர்சனம்

“விளையாட்டுக்காகவும், நான் களத்தை பகிர்ந்து கொண்டவர்களுக்காகவும், வழியில் என்னை பார்த்த ஒவ்வொரு நபருக்காகவும் நன்றி நிறைந்த இதயத்துடன் விலகிச் செல்கிறேன். எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை எப்போதும் புன்னகையுடன் திரும்பி பார்ப்பேன்” என்று உருக்கமாக தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -