எங்க பையன்தான்.. ஆனா கேப்டனாக கில்லுக்கு தகுதியே இல்ல.. இந்த ஒரு விஷயம் போதும் – நவ்ஜோத் சிங் சித்து விமர்சனம்

0
237
Gill

இந்திய டெஸ்ட் அணிக்கு சுப்மன் கில்லை புதிய கேப்டனாக கொண்டுவரக் கூடாது என அவருடைய பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்து விட்ட காரணத்தினால் புதிய கற்பனை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் தற்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியம் இருக்கிறது. இந்த நிலையில் கில் கேப்டனாக கொண்டு வரப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

- Advertisement -

விராட் கோலி – கம்பீர் மோதல்

இந்த நிலையில் விராட் கோலி அடுத்த இரண்டு வருடங்களுக்கு டெஸ்ட் கேப்டனாக இருக்க விருப்பம் தெரிவித்ததாகவும், அதை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டதாகவும், இதன் காரணமாகவே அவர் ஓய்வு முடிவுக்கு வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் எதிர்காலத்திற்காக ஒரு இளம் கேப்டன் தேவை என்று கூறுவதாகவும், அவர் இடைக்காலத் தீர்வாக விராட் கோலி வேண்டாம் என்று மறுப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது. ஏற்கனவே கம்பீர் விராட் கோலியின் கேப்டன்சி குறித்து வெளியில் கடுமையான முறையில் விமர்சனங்கள் செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கில் கேப்டனாக கூடாது

இதுகுறித்து நவ்ஜோத் சிங் சித்து பேசும்பொழுது “ரோகித் சர்மா வெளியேறிய பிறகு கில்லை புதிய கேப்டனாக கொண்டு வருவீர்கள் என்றால் அவருக்கு அனுபவம் இல்லை. இதற்கான ஆதாரத்தை நான் தருகிறேன். ஆசியா தாண்டி அவர் இதுவரையில் ஒரு சதம் கூட அடித்தது கிடையாது. இரண்டு அரை சதங்கள் மட்டுமே அடித்திருக்கிறார். அவருக்கு ஆசியா தாண்டி 25 ரன் சராசரி மட்டுமே இருக்கிறது. நான் அவர்தான் எதிர்காலம் என்று நிறைய வக்காலத்து வாங்கி இருக்கிறேன். இந்த விஷயத்தில் அப்படி முடியாது”

இதையும் படிங்க : கோலி டெஸ்ட் கிரிக்கெட் ஒய்வில் புதிய திருப்பம்.. நடந்த விஷயமே வேற.. பிசிசிஐ காட்டிய அதிரடி – வெளியான தகவல்கள்

“கில் அனுபவம் பெறுவதற்காக இடைக்கால கேப்டனாக விராட் கோலியை கொண்டு வரலாம். அவர் ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக மிகச் சிறந்த சாதனைகளை செய்திருக்கிறார். இவரும் ரோஹித் சர்மாவும் இந்திய டெஸ்ட் அணிகளை உருவாக்கினார்கள். விராட் கோலி காலத்தில் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அவர் டெஸ்ட் கேப்டனாக செய்ததை நாம் மறந்து விடுகிறோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -