ஐசிசி-ன் புதிய டெஸ்ட் ரேங்கிங் பட்டியல்.. கோலிக்கு இடமில்லை.. ஒரே இந்திய வீரருக்கு மட்டுமே இடம்!

0
1042
Viratkohli

2021-23 இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஓட்டத்திற்கான போட்டிகள் முடிவடைந்து இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இதற்கு அடுத்து மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஓட்டத்திற்கான முதல் டெஸ்ட் போட்டி தற்பொழுது பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்து வருகிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து நாளை மறுநாள் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே உலகப் புகழ்பெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஆசஸ் டெஸ்ட் தொடர் ஆரம்பிக்க இருக்கிறது.

இந்த நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் முதல் இரண்டு இடத்தில் இருக்கிறார்கள். இந்திய பேட்மேன்களில் முதல் 10 இடத்தில், பத்தாவது இடத்தில் ரிசப் பண்ட் இருக்கிறார். இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 12 மற்றும் 13 வது இடத்தில் இருக்கிறார்கள்.

வெளியிடப்பட்டிருக்கும் உலக டெஸ்ட் கிரிக்கெட் பேட்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய பேட்மேன்களின் நிலை இந்திய அணியால் ஏன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல முடியவில்லை என்று தெளிவாகக் காட்டுகிறது.

- Advertisement -

ஐசிசி வெளியிட்டு இருக்கும் உலக டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 13 இடத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் யார்? யார்? என்று கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

மார்னஸ் லபுசேன் – ஆஸ்திரேலியா – 903 புள்ளிகள்
ஸ்டீவ் ஸ்மித் – ஆஸ்திரேலியா – 885 புள்ளிகள்
டிராவீஸ் ஹெட் – ஆஸ்திரேலியா – 884 புள்ளிகள்
கேன் வில்லியம்சன் – நியூசிலாந்து – 883 புள்ளிகள்
பாபர் ஆஸம் – பாகிஸ்தான் – 862 புள்ளிகள்
ஜோ ரூட் – இங்கிலாந்து – 861 புள்ளிகள்
டேரில் மிட்சல் – நியூசிலாந்து – 792 புள்ளிகள்
திமுத் கருணரத்னே – ஸ்ரீலங்கா – 780 புள்ளிகள்
உஸ்மான் கவாஜா – ஆஸ்திரேலியா – 777 புள்ளிகள்
ரிஷப் பண்ட் – இந்தியா – 758 புள்ளிகள்
டாம் ப்ளுண்டல் – நியூசிலாந்து – 739 புள்ளிகள்
ரோகித் சர்மா – இந்தியா – 729 புள்ளிகள்
விராட் கோலி – இந்தியா – 700 புள்ளிகள்