சச்சின் சங்கக்கரா சாதனைகளுக்கு சோதனை.. விராட் கோலிக்கு காத்திருக்கும் 3 ரெக்கார்டு.. ஆஸி தொடரில் சாதிப்பாரா?

0
60
Virat

நாளை தொடங்க இருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி 3 புதிய சாதனைகள் படைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

தற்போது கில் தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாலில் அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து சூரியகுமார் யாதவ் தலைமையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

சச்சின் சாதனைக்கு ஆபத்து

சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்று விட்டார். இந்த நிலையில் அவருடைய வலிமையான வடிவமான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறார். இதில் அவருக்கு இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இலங்கையின் குமார் சங்கக்கரா படைத்திருக்கும் மெகா சாதனைகளை தாண்டுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தற்போது ஒரு வடிவத்தில் அதிகபட்ச சதம் அடித்தவர்களாக ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் தலா 51 சதங்கள் அடித்திருக்கிறார்கள். விராட் கோலி அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடித்தால், ஒரு வடிவ கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவராக சச்சினை தாண்டி புதிய உலக சாதனை படைப்பார்.

- Advertisement -

சங்கக்கரா சாதனை உடைப்பு

தற்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார். இதற்கு அடுத்து குமார் சங்ககாரா 14,234 ரன் எடுத்திருக்கிறார். மூன்றாவது இடத்தில் விராட் கோலி 14,181 ரன் கிடைத்திருக்கிறார். குமார் சங்கக்கராவை தாண்டி விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேற 54 ரன்கள் மட்டுமே தேவை. எனவே ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் இந்த சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஆஸி வீரர்களே உஷாரா இருங்க.. அந்த 2 பேர்க்கே இதான் நிலைமனா இந்திய அணியின் தரம் வியப்பா இருக்கு – டேவிட் வார்னர்

மேலும் அதிவேகமாக சர்வதேச கிரிக்கெட்டில் 644 இன்னிங்ஸ்களில் 28000 ரன்கள் எடுத்து சச்சின் முதல் இடத்தில் இருக்கிறார். இதை முறியடிப்பதற்கு இன்னும் விராட் கோலி கையில் 26 இன்னிங்ஸ் இருக்கிறது. மேலும் அவருக்கு 401 ரன்கள் தேவைப்படுகிறது. ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் மிகச் சிறப்பாக விராட் கோலிக்கு அமைந்தால் இந்த சாதனையும் முறியடிக்கப்பட்டு விடும்.

- Advertisement -