ஆஸி வீரர்களே உஷாரா இருங்க.. அந்த 2 பேர்க்கே இதான் நிலைமனா இந்திய அணியின் தரம் வியப்பா இருக்கு – டேவிட் வார்னர்

0
378

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்த பிறகு ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் தற்போதைய இந்திய அணியின் நிலை குறித்து சில முக்கிய கருத்துகளை பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வெற்றி பெற்ற பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் சீனியர் வீரர்கள் ஆன ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறார்கள். எனவே இந்த தொடர் ரசிகர்களிடையே அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே நேரத்தில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி அடுத்ததாக டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், தற்போதைய இந்திய அணியின் தரம் குறித்தும் டி20 பினிஷர் ஆக சமீப காலத்தில் சிறப்பாக செயல்படும் ரிங்கு சிங் குறித்தும் சஞ்சு சாம்சன் குறித்தும் சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணியில் வீரர்களுக்கான இடம் என்பது போட்டித் தன்மை வாய்ந்ததாக உள்ளது. அந்த வரிசையில் சாம்சன் மற்றும் ரிங்கு சிங் இருவரும் தங்களது இடத்தை பிடிக்க மிகவும் போராட வேண்டி இருந்தது. அவர்கள் இருவரும் சிறந்த ஐபிஎல் தொடர்களை பெற்றுள்ளனர். ரிங்கு ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவர். அந்த வகையான புனித இடத்திற்குள் நுழைவது கடினம்.

இதையும் படிங்க:கில்லுக்கு இப்ப ரெண்டு பேர் இருக்காங்க.. அதனால பிரச்சனை இல்ல இனிமே அவர்தான் எல்லாம் – அக்சர் படேல் பேட்டி

உங்களிடம் இரண்டு உலக தரமான வீரர்கள் நீண்ட காலமாக விளையாடி வருகின்றனர். இளைஞர்கள் தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்த உலகத்தரமான வீரர்களை எதிர்கொள்வது என்பது உற்சாகமாக இருக்கிறது. இது ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு உண்மையான சோதனையாக அமையும். எம்சிஜி மைதானத்தில் 90000 ரசிகர்களுடன் நான் அதைக் கேட்க ஆவலோடு இருக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -