‘வேற லெவல் அஸ்வின்‘ தமிழில் ஊக்கவிக்கும் கேப்டன் விராட் கோலி – இணையத்தில் வைரலான வீடியோ

0
495
Ashwin and Kohli
Photo Source: Twitter

சென்னை சேப்பாக்கத்தில் நடைப்பெற்ற இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பிரமாண்டமான வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணியின் வெற்றியில் பந்து விச்சு மற்றும் பேட்டிங்கில் ரவிச்சந்திர அஸ்வினின் பங்களிப்பு மிக அதிகம் . இதன் மூலம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1 -1 என்று சமன் செய்துள்ளது.

போட்டியின் போது அஸ்வின் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை எடுப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, கேப்டன் விராட் கோலி, சென்னை வீரரான அஸ்வினை “வேற லெவல்” என்று தமிழில் ஊக்கவித்தார். இது தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைநகரமான சென்னையில் விசில் போடு என்ற செய்கை மிகவும் பிரபலமானது. போட்டியின் நடுவே விராட் கோலி ரசிகர்களிடம் விசில் போடு என்ற சைகையை காட்டினார். இப்போது மீண்டும் “வேற லெவல், வேற லெவல்” என்று கூச்சலிட்டு அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஸ்டோக்ஸ் வெளியேற்றிய அஸ்வின் “வேற லெவலூ, வேற லெவல்” என கோஹ்லி பாராட்டியதை நீங்கள் கேள்விப்பட்டீர்களா? Sundarwashi5 @coach_rsridhar.. யார் பாதா வேலை இது. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு ஒரு ரசிகர் “ஏய்!! சாமி நம்மா பாஷா பேசுது” என கிண்டலடித்துள்ளார்

தமிழ் பேசாத கிரிக்கெட் வீரர்கள் போட்டியின் போது தமிழில் பேசி கிண்டல் செய்து ரசிகர்கள் கேட்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, தினேஷ் கார்த்திக், மாயங்க் அகர்வால், அஸ்வின், சஞ்சு சாம்சன் ஆகியோர் தமிழில் நடுவில் பேசுவதை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.