“விராட் கோலிய விளையாட விடாதிங்க!” – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொன்ன வித்தியாசமான காரணம்!

0
787
Virat

இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றில் மோதிக்கொண்ட போட்டி, மழையின் காரணமாக டிராவில் முடிவடைந்தது!

இது இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி, இந்த போட்டியை எதிர்பார்த்து காத்திருந்த உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை உருவாக்கியது.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் இந்தியா பாகிஸ்தான் போட்டியை மையமாக வைத்துதான் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆசியக் கோப்பை தொடரை நடத்துகிறது. எனவே போட்டி நடைபெறாத காரணத்தினால் பொருளாதார இழப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக மற்ற அணிகளுக்கு மழையால் போட்டி நடக்க முடியாமல் போனால், அடுத்த நாள் ரிசர்வ் டே ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரவில்லை. ஆனால் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் தந்தது. இது சர்ச்சை ஆனாலும் கூட, நேற்று இதன் மூலம் முடிவு வெளி வந்திருக்கிறது.

இதன் காரணமாக இந்திய அணிக்கு ஒரு பெரிய சிக்கல் உருவாகி இருக்கிறது. பாகிஸ்தான் அணி உடன் இரண்டு நாள், அதற்கு அடுத்து இலங்கை அணி உடன் போட்டி என, இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நடைபெறாத விஷயமாக, தொடர்ந்து மூன்று நாட்கள் போட்டிகளில் விளையாடுகிறது.

- Advertisement -

அருகில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வைத்துக்கொண்டு, தொடர்ந்து மூன்று நாட்கள் விளையாடுவது என்பது காயத்தை உருவாக்குவதற்கான அதிகபட்ச வாய்ப்பை கொடுக்கிறது. இது நல்ல விஷயம் கிடையாது. மேலும் இந்திய அணியில் சிலர் முக்கிய வீரர்கள் காயத்தில் இருந்து தற்போதுதான் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். இதன் காரணமாக இன்றைய போட்டியில் யாருக்கு ஓய்வு தர வேண்டும்? என்கின்ற விவாதம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது “இந்தியா தங்களின் முழு வலிமையான அணியைக் கொண்டு இலங்கைக்கு எதிராக களம் இறங்குவார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் அந்த ஆட்டத்தில் வெற்றி பெற விரும்புவார்கள். இந்திய அணியில் ஓய்வு தரக்கூடிய ஒரே வீரர் என்றால் அது விராட் கோலி மட்டும்தான். ஏனென்றால் அவரால்தான் எந்த இடத்தில் விட முடிகிறதோ அதே இடத்தில் திரும்ப வந்து விளையாட முடியும். எனவே மற்றவர்களுக்கு இது சாத்தியமில்லை.

ராகுலுக்கு இப்போது சதம் வந்திருக்கிறது. இப்பொழுது அவரை அவர் நன்றாக உணர்வார். எனவே அவர் இலங்கைக்கு எதிரான போட்டியில் இடம்பெற்று இன்னும் நன்றாக விளையாடட்டும். அவருக்கு மேட்ச் பிட்னஸ் தேவை. எனவே அவரது ஓய்வு குறித்து தற்பொழுது பேச முடியாது.

நான் நினைக்கும் ஒரே நபரான விராட் கோலி மட்டும்தான் அணியின் சமநிலையை குறைக்க மாட்டார். அவருக்கு ஓய்வு கொடுக்க முடியும். அவர் ஓய்வில் இருந்து திரும்ப வந்து, விட்ட இடத்தில் இருந்து அப்படியே நல்ல முறையில் விளையாடுவார்!” என்று கூறியிருக்கிறார்!